வில்லன் வேடத்தை விஷால் விரும்பியது ஏன்? இயக்குனர் மித்ரன்
- IndiaGlitz, [Friday,December 15 2017]
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றின் இடைவிடாத பணிகளுக்கு இடையே விஷால் நடித்து வரும் திரைப்படம் 'இரும்புத்திரை'. இந்த படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மித்ரன் சில சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.
இயக்குனர் மித்ரன் கூறியதாவது: இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் சொல்லும் போது அவர் இந்த கதை பிடித்திருந்தால் விஷால் பிலிம் பேக்டரியின் மூலம் வேறு யாரையாவது கதாநயாகனாக வைத்து இப்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கதையை கேட்டார். நான் கதையை சொல்லி முடித்ததும் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன். நாம இந்த படத்தை பண்றோம். ஆனால் நான் வில்லன் வேடத்தில் தான் நடிப்பேன் என்றார். நான் தான் அவரிடம் பேசி அவரை ஹீரோ வேடத்தில் தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்றேன். அந்த அளவுக்கு படத்தில் வில்லன் வேடம் வலிமையானதாக இருக்கும்' என்று கூறினார். விஷால் விரும்பிய அந்த வில்லன் வேடத்தில் தான் ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஷாலின் கேரக்டர் குறித்து இயக்குனர் மித்ரன் கூறியபோது, 'விஷால் போன்ற மிகப்பெரிய ஸ்டார் ஹீரோ என்னும் போது அவருக்காக படத்தில் நிறைய மாற்றங்கள் செய்தேன். முதலில் நம்மை போன்ற சாதாரணமான ஒரு கதாபாத்திரமாக இருந்த நாயகனின் கதாபாத்திரத்தை விஷாலுக்காக ‘ மிலிட்டரி மேன் கதாபாத்திரமாக மாற்றினேன். இப்படம் சமூகவலைதளத்தில் நமக்கு தெரியாமல் நடக்கும் நிறைய மருமங்களை பற்றியும் அது ஏற்படுத்தும் விளைவு பற்றியும். இன்னும் நாம் அறியாத பல விஷயங்களை பற்றியும் பேசும் படமாக இருக்கும். அதை நான் மிலிட்டரி பேக் டிராபை கொண்டு உருவாக்கியுள்ளேன்.
மேலும் இந்த படத்தின் நாயகி சமந்தா கேரக்டர் குறித்து அவர் மேலும் கூறியபோது, 'இந்த படத்தில் சமந்தாவுக்கு முக்கியமான கதாபாத்திரம். அதை பற்றி இப்போது கூற முடியாது. நிச்சயம் வழக்கம் போல் வரும் கதாநாயகியின் காதாபாத்திரம் போல் இல்லாமல் கதையில் முக்கியமான கதாபாத்திரமாக அவருடைய கேரக்டர் இருக்கும்' என்று இயக்குனர் மித்ரன் கூறினார்.