அயோக்யா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இந்த படத்திற்கான முதல் நாள் காட்சிகளுக்குரிய டிக்கெட்டுக்களும் முன்பதிவுகள் செய்யப்பட்ட நிலையில் திடீரென சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஷால் ரசிகர்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்
விஷால் ரசிகர்கள் நேற்று இரவில் இருந்தே திரையரங்குகளில் கட் அவுட், பேனர்கள் வைத்து இன்று இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருந்த நிலையில் ரிலீஸ் ஆகாததற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த படத்தின் வியாபாரத்தை பொருத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் முடிந்துள்ளது. தமிழக ரிலீஸ் உரிமை ரூ.11.5 கோடி, சாட்டிலைட் உரிமை ரூ.8 கோடி, டிஜிட்டல் உரிமை ரூ.4 கோடி, கேரள, கர்நாடகா உரிமை ரூ.1.5 கொடி, வெளிநாட்டு உரிமை ரூ.1.5 கோடி, இந்தி சாட்டிலைட் உரிமை ரூ.9.5 கோடி மற்றும் பாடல்கள் உரிமை ரூ.50 லட்சம் என வியாபாரம் ஆகியுள்ளது. மேலும் இந்த படத்தின் தெலுங்கு சாட்டிலைட் உரிமை மற்றும் திரையரங்கு உரிமையை தயாரிப்பாளரே வைத்துள்ளார்.
வியாபாரம் மற்றும் ஃபைனான்ஸ் என எந்த பிரச்சனையும் இந்த படத்தை பொருத்தவரை இல்லை. அதேபோல் இந்த படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் எந்த வழக்கும் இல்லை. இருப்பினும் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் இதற்கு காரணம் விஷாலின் மீதான தனிப்பட்ட காரணமா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் மது இன்று செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments