'பாயும் புலி' ஆடியோ விழாவிற்கு வரவேண்டாம். ஆர்யாவுக்கு விஷால் வேண்டுகோள்?

  • IndiaGlitz, [Saturday,August 01 2015]

பூஜை, ஆம்பள வெற்றி படங்களை அடுத்து விஷால் நடித்து முடித்துள்ள 'பாயும் புலி' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த பாடல் வெளியீட்டு விழாவிற்கு விஷாலுக்கு நெருக்கமாகவும், நண்பர்களாகவும் இருக்கும் பல முன்னணி இளையதலைமுறை நடிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஷால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஆர்யாவை தன்னுடைய 'பாயும்புலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வரவேண்டாம் என்று வேடிக்கையாக பதிவு செய்துள்ளார். கடந்த முறை தன்னுடைய படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த ஆர்யா, பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாகவும், அதனால் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிர்கு வரவேண்டாம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆர்யா கண்டிப்பாக பாயும் புலி' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்றே கூறப்படுகிறது.

விஷால், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சூரி, ஜெயப்பிரகாஷ், ஆனந்த்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'பாயும் புலி' திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். டி.இமானின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் அந்தோணியின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆகிறது.

More News

'Drishyam' Movie Review By Salil Acharya: IndiaGlitz Exclusive

Finally Ajay Devgn's much awaited thriller, 'Drishyam' is here! After different south versions of the hit Malayalam film, the Bollywood version directed by Nishikant Kamat has entered the cinema halls.

OMG: Mahesh Babu turns college student

For the time in his career, Mahesh Babu will be seen as a college-goer in his forthcoming film ‘Srimanthudu’. Inside buzz is that the scenes filmed on Mahesh and Shruti Haasan in college backdrop would be feast for the fans. Apparently, Mahesh Babu would be seen in seven patterns in terms of look including a college student .Now isn’t that something to watch out for!

Spotted: Tamannaah and Nagarjuna

Nagarjuna, Tamannaah and Karthi have been shooting in France for PVP’s untitled bilingual film directed by Vamsi Paidipally. The shooting for the schedule has begun a couple of weeks and is expected to be wrapped up by mid August.

'Welcome Back': Nana, Anil, Paresh 'Tutti' it without any cut

Nana Patekar,Anil Kapoor ,Paresh Rawal and Naseeruddin Shah shot 'Welcome Back' song "Tutti" without rehearsals! While shooting a multi-starrer is no easy feat, Anees Bazmee luckily had the pleasure of working with a fun lot of actors ,most of whom are industry veterans, who went all out to give Welcome Back their best.

Why Vishal avoided Arya for an important function?

The soul mate chums in the Tamil film industry is undoubtedly Arya and Vishal who are so close to each other that they have even vowed to marry on the same day and in the same venue.......