வெற்றி வாய்ப்பு இருந்தும் அரசியலால் தோற்றுப்போனாரா விக்ரமன்? நெட்டிசன்களின் கருத்து என்ன?

  • IndiaGlitz, [Monday,January 23 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே அந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதை கிட்டத்தட்ட பார்வையாளர்கள் கணித்து விடுவார்கள். நான்காம் சீசனில் ஆரி, ஐந்தாம் சீசனில் ராஜு என கிட்டத்தட்ட ஐம்பதாவது நாட்களிலேயே பார்வையாளர்கள் கணித்துவிட்டனர் என்பதும் அதுபோல்தான் முடிவும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் இந்த ஆறாவது சீசனையிலும் விக்ரமன்தான் வெற்றியாளர் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென அவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை எந்த சீசனிலும் அரசியல் கலக்காத நிலையில் முதல் முறையாக இந்த சீசனில் அரசியல் கலந்ததால் தான் விக்ரமனுக்கு தோல்வி ஏற்பட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஒரு அரசியல் கட்சி தலைவரே தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரமனுக்கு ஆதரவாக பதிவு செய்ததால் தான் விக்கிரமன் தோல்வி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு என்பதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ’பெரியார் நாடு’ என்று அறிவிப்பேன் என விக்ரமன் கூறியதும் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுமை, இளம் வயதில் ஆழ்ந்த அரசியல் அறிவு, சக போட்டியாளர்களை டீல் செய்யும் திறமை, டாஸ்க்குகளில் அவர் காட்டுகிற நேர்மை, அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதில் இருந்த துணிவு ஆகிய டைட்டில் பட்டம் வெல்வதற்கு உரிய அனைத்து தகுதியும் விக்ரமனுக்கு இருந்தும், இந்த தகுதிகள் எதுவுமே இல்லாத அசீமுக்கு டைட்டில் பட்டம் கிடைத்ததற்கு ஒரே காரணம் அரசியல் தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யவும்.