'இருமுகன்' படத்திற்கு 'UA'சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,August 31 2016]

சீயான் விக்ரம் ஹீரோ, வில்லன் என இரண்டு அட்டகாசமான வேடங்களில் நடித்துள்ள 'இருமுகன்' வரும் செப்டம்பர் 8ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பில் இருந்தே நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் சென்சாருக்கு சென்றபோது சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'UA'கொடுத்தனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த படத்திற்கு ஏன் சென்சார் அதிகாரிகள் 'UA' சர்டிபிகேட் கொடுத்தனர் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒருசில சிக்கலான மருந்து வகைகள் குறித்த காட்சிகளுக்காகத்தான் 'UA' சர்டிபிகேட் கொடுத்துள்ளதாகவும், மற்றபடி அதிகப்படியான வன்முறையோ அல்லது ஆபாச காட்சிகளோ இல்லை என்றும் 'UA' சர்டிபிகேட் என்பதால் குடும்ப ஆடியன்ஸ்கள் வரமாட்டார்களோ என்ற சந்தேகம் எழ வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சென்சார் அதிகாரிகள் எந்த காட்சியையும் கட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜெயம் ராஜா-சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த புன்னகை அரசி

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் ரிலிஸ் தேதியை அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்...

ரஜினி, கமல், விஜய் இடத்திற்கு மகேஷ்பாபுவை அழைத்து செல்லும் முருகதாஸ்

இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரும் தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி படங்களை இயக்கியவருமான ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினி-ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

சமீபத்தில் தனுஷ் ஒரு மிகப்பெரிய செய்தியை வெளியிட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்தை தயாரிப்பதில் பெருமை அடைகிறேன்...

சீயான் விக்ரமின் 'இருமுகன்' ரன்னிங் டைம்

விக்ரம், நயன்தாரா நடிப்பில் அரிமாநம்பி பட இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கிய 'இருமுகன்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது...

ரஜினி-விஜய் திருமணங்களில் ஒரு அபூர்வ ஒற்றுமை

ஒரு நடிகருக்கு நான்கு தலைமுறைகள் ரசிகர்களாக இருக்கின்றனர் என்றால் அதைவிட வேறு ஏதாவது ஒரு பெருமை வேண்டுமா? அத்தகைய பெருமையை பெற்றிருப்பவர்...