ப்ரியா அட்லியின் வளைகாப்பு, 'வாரிசு' இசை வெளியீடு.. விஜய் மனைவி கலந்து கொள்ளாதது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் அட்லியின் மனைவி ப்ரியா அட்லியின் வளைகாப்பு விழா ஆகியவற்றுக்கு விஜய் மட்டுமே கலந்து கொண்டு இருந்தார் என்றும் அவரது மனைவி சங்கீதா கலந்து கொள்ளாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து இது குறித்த உண்மை தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
விஜய் நடிக்கும் அனைத்து படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கும் அவரது மனைவி சங்கீதா கலந்து கொண்டு முதல் வரிசையில் உட்கார்ந்து இருப்பார் என்றும் விஜய்யின் பேச்சை அவர் ரசித்துக் கேட்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஆனால் ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சங்கீதா வரவில்லை என்பது நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இருந்து தெரிய வந்துள்ளது. அதேபோல் சமீபத்தில் விஜய்க்கு மிகவும் நெருக்கமான இயக்குனரான அட்லி மனைவி பிரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கூட சங்கீதா விஜய் கலந்து கொள்ளாமல் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இதுகுறித்து ஏராளமான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி விஜய்யின் இரண்டு குழந்தைகளும் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர்களுடன் சங்கீதாவும் சென்று விட்டதாகவும் அதனால்தான் அவர் ‘வாரிசு’ இசைநிகழ்ச்சி உள்பட எந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments