அருண்விஜய்க்கு கால்ஷீட் தர மறுத்த விஜய்! ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,June 20 2018]

விஜய் நடிக்கும் படம் ஒன்றை தான் தயாரிக்க விரும்பி, அவரை கடந்த சில வருடங்களுக்கு முன் சந்தித்ததாகவும், ஆனால் தனக்கு அவர் கால்ஷீட் தராமல் அவர் கொடுத்த அறிவுரை இன்று தனது வாழ்க்கையையே மாற்றியுள்ளதாகவும் நடிகர் அருண்விஜய் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அருண்விஜய், விஜய்யுடனான மறக்க முடியாத சந்திப்பு ஒன்றை கூறுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு பதிலளித்த அருண்விஜய், 'விஜய்யை தான் பலமுறை சந்தித்திருந்தாலும் தனக்கு மறக்கமுடியாத ஒரு சந்திப்பு இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் தான் வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது, ஒரு திரைப்படத்தை சொந்தமாக தயாரிக்க விரும்பியதாகவும், தனது நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க விஜய்யிடம் கால்ஷீட் கேட்டு சென்றதாகவும் கூறிய அருண்விஜய், அப்போது 'தயாரிப்பு எல்லாம் வேண்டாம், பொறுமையாக விடாமல் முயற்சி செய்யுங்கள், உங்கள் திறமைக்கு நிச்சயம் நடிப்பு சான்ஸ் கிடைத்து பெரிய ஆளாக வருவீர்கள்' என்று விஜய் அறிவுரை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய் கூறிய அறிவுரைப்படி நடந்த அருண்விஜய்க்கு 'என்னை அறிந்தால்' ஒரு திருப்புமுனை படமாக அமைந்து அதன் பின்னர் தற்போது மணிரத்னம் இயக்கும் 'செக்க சிவந்த வானம்', 'தடம்' மற்றும் பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' ஆகிய படங்களில் நடித்து பிசியான நடிகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

முன்ஜாமீன் கிடைக்காத எஸ்.வி.சேகருக்கு கிடைத்த ஜாமீன்

நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்தார்.

காயத்ரியாக உருமாறிய மும்தாஜ்: நெட்டிசன்கள் அலசல்

பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராக வரவேண்டும் என்று விரும்பிய மும்தாஜ், தனக்கு அந்த பதவி கிடைக்காமல் தன்னைவிட வயதில், அனுபவத்தில் குறைந்த ஜனனிக்கு

பாலாஜி-நித்யா மோதல்: பிக்பாஸ் வீட்டில் நடந்த முதல் சண்டை

பிக்பாஸ் வீட்டில் எப்போது முட்டல் மோதல் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று அந்த சண்டையை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை கல்லூரி மாணவி

ஒவ்வொரு ஆண்டும் மிஸ் இந்தியா போட்டி சிறப்பாக நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா போட்டி நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது

பிக்பாஸின் முதல் லக்சரி டாஸ்க்: சிக்கலான கேள்விகளும் நேர்மையான பதில்களும்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் லக்சரி டாஸ்க் ஆக ஒவ்வொருவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படும் என்றும் அதற்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும்