கருப்பு சிவப்பு சைக்கிளில் ஏன் வந்தார் விஜய்? இதுதான் காரணம்!

  • IndiaGlitz, [Wednesday,April 07 2021]

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்களிக்க வந்த தளபதி விஜய் சைக்கிளில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஜய் சைக்கிளில் வந்ததற்கான காரணத்தை ஒரு பக்கம் நெட்டிசன்கள் கூறிக் கொண்டிருந்த நிலையில், விஜய் வந்த சைக்கிள் கருப்பு சிவப்பு கலரில் இருந்தது என்பதால் அவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு தான் வாக்களித்திருப்பார் என்று இன்னொரு பக்கம் வைரலானது.

இந்த நிலையில் இந்த சைக்கிள் குறித்த முழு தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த சைக்கிளின் பெயர் மான்ட்ரா மெட்டல் 27.5. என்ற மாடல் ஆகும், 22 ஆயிரத்து 800 ரூபாய் விலையுள்ள இந்த சைக்கிள் விஜய்யை விட அதிக எடை கொண்டவர்களையும் தாங்கும் அளவுக்கு பக்காவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் எடை வெறும் 15.8 கிலோ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேடு பள்ளங்களை சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் மெக்கானிக்கல் லாக்-அவுட் இதில் இருக்கிறது என்பதும் கூடுதல் சிறப்பு. இந்த சைக்கிள் 2019ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தது என்பதும், இந்த சைக்கிள் கருப்பு சிவப்பு நிறங்களை தவிர வேறு நிறங்களில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேடு பள்ளங்களில் மெத்தென்று இருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த சைக்கிள் ஸ்பீடு பிரேக்கர்களில் ஏறி இறங்கும்போது அடி விழாது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் இந்த சைக்கிளில் வந்ததால் ஒரே நாளில் இந்த சைக்கிள் நிறுவனத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்து விட்டது என்பதும் இனிமேல் இந்த சைக்கிள் மிக அதிக அளவில் விற்பனையாகும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.