தேசிய விருதை திருப்பி அளிப்பாரா வித்யாபாலன்?

  • IndiaGlitz, [Friday,October 30 2015]

எப்.டி.ஐ.ஐ மாணவர்களை ஆதரித்தும், நாட்டில் பெருகி வரும் மத சகிப்புத் தன்மையற்ற நிலையைக் கண்டித்தும் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர்கள், பத்ம விருது பெற்றவர்கள், திரைப்படத்துறையில் விருது பெற்றவர்கள் ஆகியோர்கள் தங்களை விருதுகளை திருப்பி அளித்து வரும் நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன், தான் பெற்ற விருதை திருப்பி தரப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வித்யாபாலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, 'எனக்கு கிடைத்த விருது தேசத்தால் வழங்கப்பட்டது. அரசால் வழங்கப்பட்டது அல்ல. ஆதலால், நான் இந்த விருதை திரும்ப வழங்க வேண்டியது இல்லை. மேலும் எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. நான் அரசியலில் சேர்ந்தால் மோசமான தோல்வியை சந்திப்பேன் என்பது எனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே விருதுகளை திரும்ப ஒப்படைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என கவியரசு வைரமுத்து கூறியதை அடுத்து தற்போது வித்யாபாலனும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விராத் கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமண தேதி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை நேற்று திருமணம் செய்து கொண்டார்...

நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட மூன்று புதிய குழுக்கள்

சமீபத்தில் முடிவடைந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று புதிய நிர்வாகிகளாக பதவியேற்றுள்ள நிலையில்...

விவேக் இல்லத்தில் அஜீத்-விஜய்-தனுஷ்

நேற்று மாலை மூளைகாய்ச்சலால் மரணம் அடைந்த நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னாவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறவுள்ள நிலையில்...

'அழகிய தமிழ்மகன்-2 படத்தில் விஜய்?

அட்லி இயக்கத்தில் தற்போது 59வது படத்தில் நடித்து கொண்டிருக்கும் விஜய், தனது அடுத்த படத்தை இயக்க யாருக்கு வாய்ப்பு அளிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது...

'இஞ்சி இடுப்பழகி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் 'புலி' நாயகி

ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தில் ஆர்யாவின்...