அஜித்தின் 'வலிமை' கால தாமதம் ஆவது ஏன்? போனிகபூர் 

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவான ‘நேர்கொண்ட பார்வை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் ’வலிமை’ என்ற படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதமே படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட்களை கேட்டு அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் போனிகபூர் ’வலிமை’ படம் தொடங்கும் தேதி குறித்த தகவலை அறிவித்துள்ளார். இந்த படத்தில் அஜீத் வித்தியாசமாக, இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதால் அவர் அந்த கேரக்டருக்காக தன்னை தயார் செய்து வருவதாகவும், அவர் இந்த கேரக்டருக்காக தன்னை தயார் செய்து கொண்டதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.

வலிமை படத்தின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. மேலும் ஒரு கேரக்டருக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள இத்தனை மாதங்கள் அஜித் காலம் எடுத்துக்கொள்கிறார் என்றால் அந்த கேரக்டர் ரசிகர்களை முழு திருப்திபடுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

உதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கோலிவுட் திரையுலகின் இளம் நாயகர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியல் பணிகளுக்கு இடையே மூன்று படங்களில் நடித்து வருகிறார்

காமெடி நடிகர் இயக்கும்  முதல் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்

பிரபல காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில்'எல்கேஜி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது

'அயோத்தி' தீர்ப்பு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் கருத்து

இந்தியாவே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு நேற்று காலை வெளியானது. இந்த தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக வந்தாலும் இஸ்லாமியர்களுக்கும் மாற்று இடம் கொடுக்க வேண்டும்

'தளபதி 64' படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய்சேதுபதி பட நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது

அரசு பேருந்தை மறித்து டிக்டாக் வீடியோ: கைது செய்யப்பட்ட இளைஞர்

அரசுப் பேருந்தை மறித்து டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.