close
Choose your channels

'வலிமை' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் தாமதத்திற்கு இதுதான் காரணமா?

Friday, June 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் டைட்டில் தவிர வேறு ஒரு அப்டேட் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்கள் ’வலிமை’ அப்டேட் கேட்டு பல மாதங்களாக காத்து இருக்கின்றனர் என்பதும் முதலமைச்சர் முதல் பிரதமர் வரை இந்த படத்தின் அப்டேட்டை கேட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து ’வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை உள்பட எந்த விதமான அப்டேட்டும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மே ஒன்றாம் தேதி அஜித்தின் 50வது பிறந்த நாளின்போது ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அதுவும் தள்ளி போனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நேரத்தில் விரைவில் ’வலிமை’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்அர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படக்குழுவினர் தரப்பில் இருந்து ’வலிமை’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் தாமதம் ஏன் என்று காரணம் கூறிய நிலையில் ’வலிமை’ பர்ஸ்ட்லுக் போஸ்டரில் அந்த படத்தின் ரிலீஸ் தேதியும் குறிப்பிட வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் எனவே ரிலீஸ் தேதியை உறுதியாக முடிவு செய்தபின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடலாம் என்று திட்டமிட்டதாகவும் அதனால் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆவதற்கு தாமதம் என்றும் கூறிவருகின்றனர்

அஜித்குமார் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்து வரும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment