சென்னை காதலனை கடத்திய அமெரிக்க காதலி! திடுக்கிடும் காரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்த அமெரிக்க பெண் ஒருவர், தான் காதலித்தவரையே கூலிக்கு ஆள் வைத்து கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த அகமது என்பவருக்கும் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இடையே நட்பு ஏற்பட்டு அதன்பின் அது காதலாக மாறியது. இந்த நிலையில் இருவரும் சமீபத்தில் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு பின்னர் காதலியை அவர் தங்கியிருந்த இடத்தில் இறக்கிவிட்டு அகமது மட்டும் காரில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அகமதுவை மடக்கிய மூவர் அவரிடம் பணம் கேட்டு அடித்து உதைத்துள்ளனர். ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் அவருடைய ஐபோனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் வழிப்பறி கொள்ளையர்களின் இருசக்கர வாகனத்தின் எண்ணை குறிப்பிட்டு அகமது போலீசில் புகார் செய்தார். அந்த எண்ணை வைத்து அகமதுவை கடத்திய மூவரையும் கண்டுபிடித்த போலீசார் அவர்களில் இரண்டு பேர்களை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது அகமதுவின் ஐபோனை பறிக்க வேண்டும் என்பதற்காகவே கடத்தியதாகவும், அவரை கடத்த சொன்னதே அவரது அமெரிக்க காதலிதான் என்றும் கூறினர்.
இதுகுறித்து அமெரிக்க பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்தபோது 'தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து அகமது தன்னை மிரட்டியதாகவும், அதனால்தான் அவரது ஐபோனை பறித்து கொண்டு வரச்சொன்னதாகவும், தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com