நடிகர் மீதான 'மீ டூ' குற்றச்சாட்டால் பதவி இழந்தாரா டி.கே.எஸ் இளங்கோவன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் திமுக அமைப்பு செயலாளராக இருந்த டி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் அவர் எதற்காக நீக்கப்பட்டார் என்ற காரணம் அதில் குறிப்பிடப்படவில்லை என்பதால் திமுக தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் ஜான்விஜய் மீது ஒரு பெண் 'மீ டூ' குற்றச்சாட்டை கூறினார்.. இந்த குற்றச்சாட்டை பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்திருந்தார். டி.கே.எஸ் இளங்கோவனின் மருமகன் தான் ஜான் விஜய் என்பதால் டி.கே.எஸ் இளங்கோவனின் அமைப்பு செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் இதுமாதிரியான யூகங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக தலைமையே டி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று திமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments