'காலா' படத்தின் மந்தமான டிக்கெட் விற்பனைக்கு காரணம் என்ன?
- IndiaGlitz, [Wednesday,June 06 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்னும் சில மணிநேரங்களில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் வெளிவரும் முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதனைபோலவே இந்த படத்தின் முன்பதிவு தொடங்கியபோது முதல் நாள் காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் விற்றுதீர்ந்துவிட்டது.
இருப்பினும் இதற்கு முந்தைய ரஜினி படங்களான 'எந்திரன்', 'கபாலி', போன்ற படங்களுக்கு முன்பதிவு தொடங்கிய நாளே கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுக்கள் விற்று முடிந்தன. ஆனால் 'காலா' படத்திற்கு ரிலீசுக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை கூட இன்னும் டிக்கெட் கிடைக்கும் நிலை உள்ளது
சமீபத்தில் தூத்துகுடி சென்ற ரஜினிகாந்த் தூத்துகுடியிலும் சென்னையிலும் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தான் மந்தமான டிக்கெட் விற்பனைக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் படத்தின் ரிசல்ட்டை தெரிந்து கொண்டு வாரயிறுதி நாட்களில் படத்தை பார்க்கலாம் என்று நடுநிலை பார்வையாளர்களின் எண்ணம் காரணமாகவும் டிக்கெட் விற்பனை மந்தமானதற்கு காரணமாக இருக்கலாம். மேலும் 'கபாலி' படத்தின் புரமோஷன் அளவிற்கு 'காலா' படத்தின் புரமோஷன் இல்லை என்றே ஒருசாராரின் கருத்தாக உள்ளது. விமானத்தில் டைட்டில் வரைவது உள்பட ரிலீசுக்கு முன்னர் 'கபாலி' படம் உலக அளவில் பேசப்பட்டது. அது இந்த படத்தில் இல்லை என்பது குறையே
எது எப்படியோ ரஜினிகாந்த் படம் நன்றாக இருந்தாலும் மோசமாக இருந்தாலும் குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் இந்த படம் நார்மலான வெற்றியை பெறுவது உறுதி. சூப்பர் ஹிட்டாவது இந்த படத்தின் ரிசல்ட்டை பொறுத்தே உள்ளது.