உலகத்தின் மீட்பர் ஏன் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்…. விளக்கம் அளிக்கும் ஆடியோ!!!

 

இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கேட்ட எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். உலகத்தின் ரட்சகர் தன்னுடைய மகனை மாட்டுத் தொழுத்தில் பிறக்கச் செய்தார். உலக மக்களின் பாவங்களை போக்கவே இயேசு கிறிஸ்துவின் சார்பாக இவர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். இதன்மூலம் உலக மக்களின் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு மக்கள் நித்திய வாழ்வை பெறுவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. இதற்கான மேலும் விளக்கத்தை அளிக்கிறது இந்த ஆடியோ கதை.

கடவுள் மனிதனை ஏன் படைத்தார் என்ற கேள்விக்கு முதலில் வருவோம். தன்னைப் போல உருவம் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும் என நினைத்த கடவுள் தன்னுடைய உருவத்தை மண்ணில் உருவாக்கி அதற்குத் தன்னுடைய மூச்சுக்காற்றைக் கொண்டே உருவம் கொடுத்ததாக கிறிஸ்துவத்தில் ஒரு கதை உண்டு. மேலும் மனிதன் இந்த உலகில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும் கடவுள் உருவாக்கி வைத்தார். ஆனால் இந்த விதிமுறைகளை எல்லாம் நாளடைவில் கடைப்பிடிக்காத மனிதர்கள் தவறு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இதனால் மனித சமூகத்தில் கூச்சல், குழப்பம், பொறாமை, சண்டை, சச்சரவு, கொலை என அடுக்கடுக்கான பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. இதற்கு விடைக்காணும் நோக்கில் இயேசு கிறிஸ்து தன் சார்பாக அவரது மகனை பூமிக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர் பாவப்பட்ட மக்களுக்காகவே இந்த உலகில் பிறந்து இருக்கிறார். மேலும் ஏன் இயேசு கிறிஸ்து சூசையப்பருக்கும்-மரியாளுக்கும் பிறக்க வேண்டும் என்ற ஒரு கேள்வியும் எழலாம். இதற்கும் பைபிள் விளக்கம் அளிக்கிறது.

சூசையப்பர் தாவீதின் வம்சத்தை சேர்ந்தவர். மரியாள்  யோசுவாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்த வம்சத்தினர் கடவுளிடம் வேண்டும் போது இந்த பூமியை சிக்கலில் இருந்து மீட்க வேண்டும். அதற்கான தீர்க்கத்தரிசி எங்களுடைய வம்சாவளியில் இருந்தே வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால் இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கான மீட்பரை தாவீது மற்றும் யோசுவாவின் வம்சாவளியைச் சேர்ந்த சூசையப்பர்-மரியாள் மூலமாக அனுப்பி வைத்தார். அவர்தான் குழந்தை இயேசு.

இந்த உலகத்திற்கான மீட்பர் பிறந்து இருக்கிறார் என்று சூசையப்பர் மற்றும் மரியாளைத் தவிர மற்ற சிலருக்கும் அறிவிக்கப்பட்டது. அவர்கள்தான் இடையர் குலத்தை சேர்ந்தவர்கள். பாவப்பட்ட ஏழை மக்களின் துன்பம் தீர்க்க வந்த தீர்க்கத்தரிசியின் பிறப்பை இடையர்கள் உடனே அறிந்து கொண்டனர். அவர்களைத் தவிர சில அறிஞர்களும் வானத்தில் தோன்றிய நட்சத்திரங்களை வைத்து கண்டுபிடித்து விட்டனர். இந்த உலகத்தின் பாவங்களை எல்லாம் தீர்க்க வந்த தீர்க்கத்தரிசி, இயேசு கிறிஸ்துவின் ஒரே மகன் சூசையப்பர்-மரியாளைத்தான் அப்பா, அம்மா என்று அழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி மாட்டுத் தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்ததற்கான காரணமும் கேட்கப்படுவது உண்டு. ஏரோது அரசன் அந்தக் காலத்தில் தன்னுடைய நாட்டில் உள்ள மக்கள் தொகையை கணக்கெடுக்க ஆரம்பித்தான். மேலும் தன்னுடைய நாட்டில் இருந்து வெளியேறியவர்களைக் கண்டுபிடிக்கவும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்காக வேண்டி சூசையப்பரும்- மரியாளும் பெத்லகேம் செல்கின்றனர். அப்போது மரியாளுக்கு நிறைமாதக் கர்ப்பம். சூசையப்பரோ தச்சு வேலைசெய்யும் ஒரு தொழிலாளி.

இந்நிலைமையில் இருவரும் நடந்தே பெத்லகேமிற்கு செல்கின்றனர். அங்கு சென்றது சத்திரத்தில் தங்கிக்கொள்ள முடிவெடுக்கின்றனர். ஆனால் சத்திரம் நிரம்பி வழிந்ததால் அருகில் உள்ள வீடுகளில் உதவிக் கேட்கின்றனர். ஒரு வழியாக ஆடு, மாடு கட்டும் ஒரு மாட்டுத் தொழுவம்தான் மரியாளுக்கு கிடைத்தது. அந்நேரத்தில்தான் இயேசு கிறிஸ்துவின் ஒரே மகன், இந்த உலகத்தின் ரட்சகன் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். இவர் மண்ணுலகில் பிறந்த அனைவரின் பாவங்களையும் போக்கி அவர்களுக்கு நித்திய வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே அவதரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

More News

பாலாவின் சிரிப்புக்கு பின் இருக்கும் சோக காதல் கதை: வைரலாகும் வீடியோ 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய பாலாஜி, தந்திரமாகவும் திறமையாகவும் விளையாடி வருவதாகவும் அவர் கண்டிப்பாக இறுதிப்போட்டியில் நுழையும் வாய்ப்பு உள்ளது

சூர்யா, கார்த்திக் பட நாயகிக்கு கொரோனா பாதிப்பு…

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிசியான இளம் நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு

தங்கையாரே..... கனிமொழி எம்பிக்கு கமல், ரஜினி பட நடிகை எழுதிய கடிதம்!

சமீபத்தில் நெல்லையில் பேட்டியளித்த திமுக எம்பி கனிமொழி அவர்கள் ரஜினி, கமலுக்கு வாக்களித்து மக்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்து கொள்ள விரும்ப மாட்டார்கள் என்று கூறியிருந்தார்

மேக்ஸ்வெல்லை காப்பாற்றிய ஃபிளையிங் ஃபாக்ஸ் கேமிரா: ருசிகர வீடியோ

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் தூக்கி அடித்த பந்து மேலே சென்று போட்டியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஃபிளையிங் ஃபாக்ஸ் கேமிராவை பலமாக தாக்கி கீழே விழுந்ததால்

ஜவுளிக்கடை தீவிபத்தின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தற்கொலை: அதிர்ச்சி காரணம்!

கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தீபாவளிக்கு மறுநாள் திடீரென மதுரையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.