close
Choose your channels

'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடிக்காதது ஏன்? டாப்ஸி விளக்கம்

Saturday, June 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமிதாப் நடித்த 'பிங்க்' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த படம் தான் பாலிவுட்டில் நடிகை டாப்ஸியை முன்னணி நடிகையாக்க உதவியது. இந்த படத்தின் வெற்றிக்கு பின் அவர் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து பிசியானார்.

இந்த நிலையில் தனக்கு திருப்புமுனை கொடுத்த ஒரு படத்தின் ரீமேக் படமான 'நேர் கொண்ட பார்வை' படத்திலும் அவர்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அஜித்துடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பை அவர் மிஸ் செய்ய மாட்டார் என்றே கருதப்பட்டது.

இந்த நிலையில் 'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடிக்க தன்னை யாரும் அழைக்கவில்லை என்றும் அப்படியே அழைத்திருந்தாலும் தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன்' என்றும் பேட்டி ஒன்றில் டாப்ஸி தெரிவித்துள்ளார். நான் ஏற்கனவே நடித்த கேரக்டராக இருந்தாலும் அந்த கேரக்டரில் மீண்டும் நடிக்க ரொம்பவே மெனக்கிட வேண்டும் என்றும், அதனால் ஸ்ட்ரெஸ் அதிகம் ஏற்படும் என்றும், மீண்டும் ஒரு எமோஷனல் ரிஸ்க் எடுக்க தான் விரும்பவில்லை' என்றும் டாப்சி கூறியிருந்தார்.

இருப்பினும் அஜித்துடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே அஜித்துடன் 'ஆரம்பம்' படத்தில் டாப்ஸி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment