அரசியல் குறித்த முக்கிய முடிவு: நவம்பர் 30ஐ ரஜினி தேர்வு செய்தது ஏன்?
- IndiaGlitz, [Sunday,November 29 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த பல வருடமாக அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படாலும் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அவர் அதிகாரபூர்வமாக அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்தார்
அதன்பின் அவர் தனது ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பைத் விரிவுபடுத்தினார் என்பதும் அதற்கான நிர்வாகிகள் அனைவரையும் நியமனம் செய்தார் என்பதும் இந்த ரஜனி மக்கள் மன்றம் தான் அரசியல் கட்சியாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த டுவீட் மூலம் அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின் வாங்கி விட்டதாக செய்திகள் பரவியது. இருப்பினும் அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கூறவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் அரசியல் கட்சியைத் தொடங்கும் முடிவை ரஜினிகாந்தை எடுப்பார் என்று நம்பிக் கொண்டிருந்தனர்
இந்த நிலையில் நேற்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் நவம்பர் 30ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அவர்களை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து அனைத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது
இந்த நிலையில் நாளை அதாவது நவம்பர் 30-ஆம் தேதி நிர்வாகிகளுடனான சந்திப்புக்கு பின் ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் நவம்பர் 30ஆம் தேதி தான் மகா அவதார் பாபாஜியின் பிறந்த நாள் என்பதும் அவருடைய பிறந்த நாளில் ரஜினி தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்