விஜய் நோ சொன்னதால் தான் கைமாறியதா 'கோட்' திரைப்படம்? என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Wednesday,May 15 2024]

சன் டிவி விதித்த நிபந்தனையை விஜய் ஏற்றுக்கொள்ளாததால் தான் ‘கோட்’திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவியில் இருந்து ஜீடிவிக்கு கை மாறியதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு சன் டிவி வாங்கியதாக முதலில் செய்திகள் வெளியான நிலையில் அதன் பிறகு இந்த படம் ஜி டிவிக்கு கை மாறிவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘கோட்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற சன் டிவி சில நிபந்தனைகளை விதித்ததாகவும் அதில் ஒன்று சன் டிவிக்கு விஜய் இரண்டு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிபந்தனையை ஒரு வினாடி கூட தாமதம் செய்யாமல் விஜய் 'நோ’ என்று கூறிய ஏற்க மறுத்து விட்டதாகவும் இதனை அடுத்து ‘கோட்’ திரைப்படத்தின் உரிமையை சன் டிவி வாங்கவில்லை என்றும் அதனை அடுத்து தான் ஜி டிவிக்கு இந்த படத்தை விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘கோட்’ படத்தை வாங்குவதாக இருந்தால் ரிலீஸ் செய்த ஒரு மாதத்திற்கு சன் டிவியில் ஒளிபரப்பி விடுவோம் என்றும், நாங்கள் சொல்லும் தேதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும், அரசியல் சம்பந்தமான காட்சிகள் படத்தில் இருக்கக் கூடாது என்றும் சன் டிவி நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் சமூக வலைதளங்களில் இவை வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.