பாலாஜிக்கு எதிராக ஓட்டு போட சுசி கூறியதற்கு இதுதான் காரணமா?

  • IndiaGlitz, [Monday,January 18 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய இறுதி போட்டியில் ஆரி வின்னர் என்றும், பாலாஜி ரன்னர் என்றும் அறிவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாலாஜிக்கு நெருக்கமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சுசித்ரா, பாலாஜிக்கு ஓட்டு போட வேண்டாம், ஆரிக்கு ஓட்டு போடுங்கள் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த சுசித்ரா அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பாலாஜியுடன் நெருக்கமாகி அவருக்கு சேவை செய்யும் நபராக மாறியதை பார்த்த பார்வையாளர்கள் எரிச்சலடைந்து அவரை இரண்டே வாரத்தில் வெளியேற்றினார்கள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் அவர் பாலாஜிக்கு ஆதரவாகவே பல பதிவுகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென ஒருநாள் அவர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஆரிக்கு ஓட்டு போடுங்கள், பாலாஜி மரியாதை தெரியாதவர் என்று பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ஷிவானியை பாலாஜி ஆள் என்று நான் சொன்னதால், நான் திட்டு வாங்க சரியான நபர் தான் என்று பாலாஜியை என்னிடம் கூறினார். இது பாலாவின் ரசிகர்களுக்கு தான். மரியாதை என்றால் என்னவென்றே தெரியாத ஒருவர் தான் பாலாஜி. மற்றவர்களை பயன்படுத்திக் கொள்ளும் நபர். எனவே அனைவரும் ஆரிக்கு ஓட்டு போடுங்கள் என்று சுசித்ரா பதிவு செய்துள்ளார்

கடைசி நேரத்தில் திடீரென பாலாஜிக்கு நெருக்கமாக இருந்த சுசித்ராவே ஆரிக்கு ஆதரவளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது