காதலர் வருவார் என பொய் சொன்னேன்: கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்ணின் ஆடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீலகிரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென தனது காதலர் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அவர் ஆடியோ ஒன்றின் மூலம் திருமணத்தை நிறுத்தியது ஏன்? என்று விளக்கம் அளித்துள்ளார்
நீலகிரி மாவட்டம் மட்டகண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி ஆகிய இருவருக்கும் திருமணம் நடத்த இரு வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர். மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் மேடையில் இருந்தபோது மணமக்களின் சமூகத்தின் மரபுப்படி பெண்ணுக்கு திருமணம் செய்ய சம்மதமா? என கேட்கப்பட்டது. அப்போது பிரியதர்ஷினி திடீரென தனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்றும் தன்னுடைய காதலர் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என்றும் அவரைத் தான் திருமணம் செய்யப் போகிறேன் என்றும் கூறினார்
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகளின் பெற்றோர் அவரை தாக்க முயன்றதாகவும் அதன் பின்னர் அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்ததாகவும் செய்தி வெளிவந்தன. இந்த நிலையில் திடீரென தன்னை மணக்க சம்மதம் இல்லை என்று மணமகள் கூறியதால் மணமகன் தர்மசங்கடம் அடைந்து, அதன்பின் அவர் தனது பெற்றோருடன் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறியதால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டது
இந்த நிலையில் மணப்பெண் பிரியதர்ஷினி தனது காதலரை தேடி சென்னைக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அவர் ஆடியோ ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார். தனக்கு காதலன் என்று யாரும் இல்லை என்றும் காதலனை தேடி சென்னைக்கு வந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் வதந்தி என்றும் தன்னுடைய பெற்றோருடன் தான் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட இளைஞர் மீது பல தவறான தகவல்கள் தனக்கு கிடைத்ததாகவும் அதனால்தான் திருமணத்தை நிறுத்த காதலன் இருப்பதாக பொய் கூறியதாகவும், தான் தன்னுடைய பெற்றோருடன்தான் சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் அந்த ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments