கருணாநிதி ஆட்சி தருவேன்' என்று ஸ்டாலின் சொல்லாதது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்காக அதிமுக, திமுக இரு கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து கொண்டிருக்கும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை ஓரங்கட்டி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
நான் கலைஞரின் மகன் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை பெருமையாக பேசி வந்த ஸ்டாலின், தற்போது கலைஞரின் ஆட்சியை தருவேன் என்று ஒரு இடத்தில் கூட அவர் பிரச்சாரத்தின்போது செல்லவில்லையே? அது ஏன்? என்று கேள்வியை திமுக கூட்டணிக்கு எதிராக போட்டி போடும் அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம். காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறும் திமுகவினர் ஏன் கருணாநிதி ஆட்சி அமைப்போம் என்று கூறவில்லை? என்ற கேள்வியையும் அவர்கள் எழுந்துள்ளனர். கருணாநிதி என்ற மாபெரும் தலைவரின் மகன் என்பதால் தான் ஸ்டாலினுக்கு தற்போது திமுக தலைவர் என்ற இடம் கிடைத்துள்ளது என்பதும், முதலமைச்சர் வேட்பாளர் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது என்றும், ஆனால் தனது தந்தையான கருணாநிதியை அவர் மறந்து விட்டு, அவர் செய்த மக்கள் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லாமல், தனிப்பட்ட முறையில் தன்னை மட்டுமே முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பது ஏன் என்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் ஸ்டாலின் ஒரு முறை கூட இன்னும் முதலமைச்சராக அமராத நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத நிலையிலும் நான்கு ஆண்டுகள் அரசையும் கட்டிக்காத்து கட்சியையும் உடையாமல் பாதுகாத்து வரும் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி ஸ்டாலின் கேள்விக்கணைகளை வீசுவது சரியா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments