மொழி தெரியாத நடிகைகளுக்கு ஏன் வாய்ப்பு தரவேண்டும்? பகீர் கருத்து வெளியிட்ட இளம் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்துவரும் இளம் நடிகை ஒருவர் சினிமாவில் மொழி தெரிந்த நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பி சில முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் ‘ஒய்’ எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ஈஷா ரெப்பா. இவர் ‘நித்தம் ஒருவானம்’ போன்ற ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது ஜீ.வி.பிரகாஷுடன் இணைந்து ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் இவருடைய நடிப்பு வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இவர் தற்போது ‘மாயா மச்சிந்திரா‘ திரைப்படத்தில் நடிகர் சுகிர் பாப்புடன் இணைந்து நடித்து வருகிறார். கூடவே ஜெ.டி. சக்கரவர்த்தி ஜோடியாக ‘தயா‘ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு சினிமா சொந்த மொழியை பேசும் நடிகர்களை அதிகம் வரவேற்க வேண்டும். இது சரியா தவறா என்று நான் சொல்லவில்லை. நடிகர்கள் பார்வையாளர்களுடன் தொடர்புபடுத்துவது முக்கியம் என்பதை சில இளைய இயக்குநர்கள் புரிந்துகொள்வது போல் தெரிகிறது.
நான் தமிழ், மலையாளத்தில் நடிக்கும்போது தெலுங்கு நடிகர், நடிகைகளை குறித்து பேச்சு அடிபடுகிறது. அதேபோல தெலுங்கில் மற்ற மொழி நடிகர்களைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் பார்வையாளர்கள் மற்ற மொழி நடிகர்களை பணி அமர்த்த வேண்டும் என்று கேட்பதில்லையே? அப்படியிருக்கும்போது ஏன் மற்ற மொழி நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்புகளைத் தர வேண்டும்.
இது பெரிய அம்சமாக இல்லாமல் இருக்கலாம், மொழி அடிப்படையாக இல்லாமல் ஒருவர் ஏன் நடிக்கக் கூடாது? எனும் கேள்வி எழலாம். இது நடிகைகளுக்கு மட்டும்தான் என்று நான் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. பொதுவாக நடிகர்கள் பார்வையாளக்ளுடன் தொடர்புபடுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் ‘மாமா மச்சிந்திரா‘ திரைப்படத்தில் சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக நடிக்கிறேன். எனது அடுத்த தமிழ் படத்தில் சப் இன்ஸ்பெக்ராக நடிக்கிறேன். ஓடிடி தளங்கள் திரைப்படங்களைத் தாண்டி பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. இதனால் பலருக்கும் கனவு நனவாக வேண்டிய நேரமாக இருக்கிறது.
நான் லாக் டவுனில் வில்வித்தை, சண்டை பயிற்சிகளை கற்றுக் கொண்டேன் போன்ற பல்வேறு தகவல்களை நடிகை ஈஷா ரெப்பா கூறியுள்ள நிலையில் அவருடைய கருத்துக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments