வரலாற்றில் பேசும் படமாக மாறுமா ?கயல் ஆனந்தியின் மங்கை திரைப்படம்.
- IndiaGlitz, [Tuesday,April 02 2024]
தெலுங்கானா மாநிலத்திலுள்ள வாரங்கலில் பிறந்தவர் தான் நம் எல்லோராலும் அறியப்படும் தமிழ் சினிமாவின் வளர்ப்பு மங்கையாகிய கயல் ஆனந்தி.இவர் பஸ் ஸ்டாப் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமாகி பின் தமிழில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.பின்னர் பிரபு சாலமனின் கயல் என்ற திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வெற்றி கண்டார்.
ஆனந்தி அவர்களின் வாழ்க்கையிலும் சரி.சினிமா துறையிலும் சரி .நிறைய சர்ச்சைகள் இருந்துள்ளன.குறிப்பாக அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டார் என பல சர்ச்சைகள் எழுந்தன.
ஆனால் அதற்கு எல்லாவற்றிற்குமே ஆனந்தியே அவரது நேர்காணலில் பதில் அளித்து இருக்கிறார்.மேலும் ஆனந்தி அவர்களின் நிஜப்பெயர் ரட்ஷிதா.ஆனால் கயல் படத்திற்கு பிறகு தமிழ் மக்கள் அனைவராலும் ஆனந்தி என்றே அன்பான அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.
மேலும் கயல் படத்திற்கு பிறகு ஆனந்தி அவர்கள் முழுக்கவே தமிழில் மட்டுமே நடித்து வந்தார்.சண்டிவீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா,பரியேறும் பெருமாள்,விசாரணை,எனக்கு இன்னொரு பேர் இருக்கு குமாரு, ரூபாய்,கடவுள் இருக்கான் குமாரு ,பெண்டிகர்,என்னோட ஆளு செருப்பு காணோம்,மன்னன் வகையறா என பல திரைப்படங்கள் அவர் தமிழில் தான் நடித்திருக்கிறார்.ஆனால் கயல் படத்தில் இவர் மிகவும் எளிமையாக கிராமத்து பெண்ணாக டார்க் ஸ்கின் டோன் வைத்தது போல் நடித்ததே இங்கு பலரை கவர்ந்தது.
இயக்குநர் பிரபு சாலமன் அவர்கள் ஒரு நேர்காணலில் என்னுடைய படத்திற்கு மிகவும் வெந்நிறமான தோற்றமுடைய பெண் தேவை இல்லை.நான் எதிர்ப்பார்த்தது மிகவும் எளிமையான கருப்பான சருமத்துடன் அமைதியான தோரணையுடைய பெண்ணே தேவை அதற்கு ஆனந்தி சரியான பொருத்தமாக இருந்தார்.
இதற்கு பிறகு கயல் ஆனந்தி கேரளாவிற்கு சென்று சில சிகிச்சைகள் எடுத்து கொண்டு பின் அவர் திரும்பும்போது எந்த அளவுக்கு வெந்நிறமாக திரும்பி வந்தார் என்பதை நாம் பல பத்திரிக்கைகளிலும் சோஷியல் மீடியா பக்கத்திலும் பார்த்தோம்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படம் ஒரு காமெடியான படம் என்றே சொல்லி என்னிடம் ஒப்புதல் வாங்கினர்.ஆனால் அது ஒரு அடல்ட் கலந்த படம் என்பது எனக்கு தெரியாது.நான் வெறுக்கக் கூடிய படம்.என்னுடைய சினிமா பயணத்தில் நான் மிகவும் ஏமாந்த மற்றும் சலிப்படைந்த படம் அது தான் எனக் கூறியுள்ளார் நடிகை கயல் ஆனந்தி.
அதே போல் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஆனந்திக்கு இடையே ஏதோ இருக்கு என்ற ரூமர்ஸ்க்கும் கயல் ஆனந்தி பத்திரிகை நேர்காணலில்,எனக்கு அவர் எந்த வாய்ப்பும் வாங்கி தரவில்லை இது எல்லாமே எனக்கு தானாக வந்த படவாய்ப்புகள்.மற்றப்படி இதில் எதுவுமே இல்லை.
பிறகு கமலி from நடுக்காவேரி திரைப்படம் ஆனந்திக்கு தனி வரவேற்பைப் பெற்றது.ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழக்கூடிய பிரச்சினைகள் தடுமாற்றம் தோல்விகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி,மற்ற பெண்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக விளங்கிய இத்திரைப்படம் தான் எனது வாழ்க்கையின் சிறந்த படம் என ஆனந்தி கூறியுள்ளார்.
சமீபமாக ஆனந்தி,இராவணக் கோட்டம்,மங்கை ,வொயிட் ரோஸ் போன்ற திரைப்படங்கள் நடித்து முடித்துள்ளார்.திருமண வாழ்க்கையை பொறுத்த வரையில் என்ஜினியரிங் முடித்த சாக்ரடீஸ் என்ற ஒருவரை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு பின் திருமணம் முடித்து கொண்டனர்.
தற்போது ஆனந்தி ஒரு குழந்தையுடன் தனது திருமண வாழ்க்கையை அழகாக நடத்தி செல்கிறார்.தொடர்ந்து பெண்களை சார்ந்து படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கயல் ஆனந்தி நிறைய பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.