சீமராஜா' டைட்டில் ஏன் தெரியுமா? வெளிவராத புதிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,February 17 2018]

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் 'சீமராஜா' என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் குதிரையில் உட்கார்ந்து கையில் மஞ்சள் கொடியை பிடித்துள்ளார். இந்த ஸ்டில்லுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டைட்டிலுக்கு ஏற்றாற்போல் இந்த படத்தில் அரசர் காலத்திய சம்பவங்கள் சில இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராஜராஜ சோழன் காலத்திய சம்பவங்கள் இந்த படத்தில் இருப்பதாகவும், இதனால்தான் இந்த படத்திற்கு 'சீமராஜா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரும் வினாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் இந்த படத்தில் முதல்முறையாக சிவகார்த்திகேயன் - சமந்தா ஜோடி சேர்ந்துள்ளனர். டி.இமான் இசையமைப்பில் 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

More News

அங்கன்வாடி பள்ளியில் கலெக்டர் மகள்: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தனது செல்ல மகளை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.

தளபதி விஜய்க்கு இன்று முக்கியமான நாள்! எப்படி தெரியுமா?

அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நெருங்கி கொண்டிருக்கும் தளபதி விஜய், தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பது தெரிந்ததே.

கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் திடீர் மாற்றம்

நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை இராமநாதபுரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்

சிவகார்த்திகேயனின் பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தென்னிந்திய நடிகை

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான 'சீம்ராஜா' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.