இரண்டாம் பாக படங்கள் தோல்வி அடைவது ஏன்?
- IndiaGlitz, [Friday,October 19 2018]
தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாம் பாக டிரண்ட் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த சில வருடங்களில் பல இரண்டாம் பாகங்கள் படம் வெளிவந்தாலும் அவை பெரும்பாலும் வெற்றி பெறவில்லை., காரணம், படம் ஆரம்பிக்கும்போதே இரண்டாம் பாகம் திட்டமிடாமல் படம் வெளிவந்து பல வருடங்கள் கழித்து அந்த வெற்றியை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இரண்டாம் பாக திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
குறிப்பாக பாகுபலி, விஸ்வரூபம், போன்ற திரைப்படங்கள் ஆரம்பத்திலேயே இரண்டாம் பாகம் உருவாக்க முடிவு செய்ததால் இந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் முதல் பாகத்தின் கதைக்குக் சம்பந்தமே இல்லாமல், டைட்டிலை மட்டும் பயன்படுத்தி இரண்டாம் பாகமாக வெளிவரும் படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைகின்றன. இருப்பினும் கலகலப்பு 2, தமிழ்ப்படம் 2 போன்ற ஒருசில படங்கள் இதில் விதிவிலக்காக உள்ளது.
அந்த வரிசையில் விஐபி 2, ஜெய்ஹிந்த் 2, டார்லிங் 2, ஜித்தன் 2, கோ 2, மணல் கயிறு 2, புலன்விசாரணை 2, சென்னையில் ஓர் நாள் 2 போன்ற ஒருசில படங்கள் வரவேற்பை பெற தவறியதற்கு முக்கிய காரணம், முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் இருந்ததுதான். இனிமேலாவது இரண்டாம் பாகம் எடுப்பவர்கள் முதல் பாகத்துடன் சம்பந்தம் இருந்தால் மட்டும் தயாரிப்பது நல்லது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.