தடுப்பூசி போட்டுக்கொண்டால் மது அருந்தக்கூடாதா??? விளக்கம் அளிக்கும் விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஃபைசர், ஸ்புட்னிக் வி எனும் 2 கொரோனா தடுப்பூசிகள் தற்போது பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவலை பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகிய 2 நாடுகளுமே உறுதிப்படுத்தி உள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு 2 மாத காலம் வரை மது அருந்தக்கூடாது எனும் தகவலை ரஷ்யாவின் சுகாதாரப் பாதுகாப்புத் துறை தலைவர் வெளியிட்டு உள்ளார்.
இந்தத் தகவலைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள் ஒரு கிளாஸ் ஒயின் அல்லது பீர் போன்றவை கொரோனா தடுப்பூசியின் செயல் திறனை குறைத்து விடாது எனத் தெரிவித்து உள்ளனர். மேலும் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனக் கூறி உள்ளனர். ஆனால் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை பொது மக்களுக்கு கொடுக்க இருக்கும் ரஷ்யாவின் சுகாதாரத்துறை கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு அடுத்த 2 மாதங்களுக்கு மது அருந்தக்கூடாது என வலியுறுத்தி வருகிறது.
மேலும் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு அடுத்த 21 நாட்கள் கழித்து மீண்டும் இன்னொரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். அப்படி அடுத்த டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பின்பும் தொடர்ந்து 42 நாட்கள் வரையிலும் மது அருந்தக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரும் அதிர்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர். காரணம் உலகிலேயே அதிகம் மது அருந்தும் நாடுகளில் ரஷ்யா 4 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு மக்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் கடினம் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் விஞ்ஞானிகள் மது குடல் பகுதியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவோ அல்லது தடுப்பூசியின் உயிரணுக்களை, திறன் குறைந்ததாக மாற்றவோ செய்யாது. மேலும் பாக்டீரியா அல்லது வைரஸ் போன்றவற்றிற்கு எதிரான செயல் திறனையும் இது குறைத்து விடும் எனச் சொல்வதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கமலேயா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் –வி பற்றி அறிவிப்பை அந்நாட்டு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்நிலையில் 95 நாட்களுக்கு பிறகு தற்போது இத்தடுப்பூசி பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். ஆனால் இந்தத் தடுப்பூசி அனைத்துக் கட்ட சோதனைகளுக்கும் உட்படுத்தாமலே அவசரத் தேவைக்காக கொண்டு வரப்படுகிறது என்ற குற்றச்சாட்டை சில விஞ்ஞானிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இத்தடுப்பூசி மருந்தானது வெறுமனே 39 பேரிடம் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பிபிசி ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"One glass of champagne won't hurt anyone, not even your immune system", said Dr Gintsburg, developer of the #SputnikV vaccine. pic.twitter.com/1EAqdbMLpY
— Sputnik V (@sputnikvaccine) December 9, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments