தடுப்பூசி போட்டுக்கொண்டால் மது அருந்தக்கூடாதா??? விளக்கம் அளிக்கும் விஞ்ஞானிகள்!!!

  • IndiaGlitz, [Friday,December 11 2020]

 

 

ஃபைசர், ஸ்புட்னிக் வி எனும் 2 கொரோனா தடுப்பூசிகள் தற்போது பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவலை பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகிய 2 நாடுகளுமே உறுதிப்படுத்தி உள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு 2 மாத காலம் வரை மது அருந்தக்கூடாது எனும் தகவலை ரஷ்யாவின் சுகாதாரப் பாதுகாப்புத் துறை தலைவர் வெளியிட்டு உள்ளார்.

இந்தத் தகவலைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள் ஒரு கிளாஸ் ஒயின் அல்லது பீர் போன்றவை கொரோனா தடுப்பூசியின்  செயல் திறனை குறைத்து விடாது எனத் தெரிவித்து உள்ளனர்.  மேலும் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனக் கூறி உள்ளனர். ஆனால் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை பொது மக்களுக்கு கொடுக்க இருக்கும் ரஷ்யாவின் சுகாதாரத்துறை கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு அடுத்த 2 மாதங்களுக்கு மது அருந்தக்கூடாது என வலியுறுத்தி வருகிறது.

மேலும் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு அடுத்த 21 நாட்கள் கழித்து மீண்டும் இன்னொரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். அப்படி அடுத்த டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பின்பும் தொடர்ந்து 42 நாட்கள் வரையிலும் மது அருந்தக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரும் அதிர்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர். காரணம் உலகிலேயே அதிகம் மது அருந்தும் நாடுகளில் ரஷ்யா 4 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு மக்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் கடினம் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் விஞ்ஞானிகள் மது குடல் பகுதியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவோ அல்லது தடுப்பூசியின் உயிரணுக்களை, திறன் குறைந்ததாக மாற்றவோ செய்யாது. மேலும் பாக்டீரியா அல்லது வைரஸ் போன்றவற்றிற்கு எதிரான செயல் திறனையும் இது குறைத்து விடும் எனச் சொல்வதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கமலேயா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் –வி பற்றி அறிவிப்பை அந்நாட்டு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்நிலையில் 95 நாட்களுக்கு பிறகு தற்போது இத்தடுப்பூசி பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். ஆனால் இந்தத் தடுப்பூசி அனைத்துக் கட்ட சோதனைகளுக்கும் உட்படுத்தாமலே அவசரத் தேவைக்காக கொண்டு வரப்படுகிறது என்ற குற்றச்சாட்டை சில விஞ்ஞானிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இத்தடுப்பூசி மருந்தானது வெறுமனே 39 பேரிடம் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பிபிசி ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரியோவுக்கு ஒரு குறும்படம்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் நடந்த புதிய மனிதா டாஸ்க்கில் குரூப்பிஸம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது மட்டுமின்றி அந்த குரூப்பில் உள்ள ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு பொய்யர்கள் என்பதும் தெரிய வருகிறது.

கேப்டன் பதவியை ரம்யாவுக்கு விட்டு கொடுக்கின்றாரா பாலாஜி?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஒட்டுமொத்தமாக சிறந்த போட்டியாளராக தேர்வு செய்யப்பட்ட நிஷாவும், இந்த வாரத்தில் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட பாலாஜி

நீங்களுமா? ஆரிக்கு ஒரு குறும்படத்தை பார்சல் செய்த நெட்டிசன்கள்! 

பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் செய்யும் பல தவறுகளை கமல்ஹாசன் கண்டுகொள்வதில்லை என்றும் கடந்த சீசன்கள் போல் இந்த சீசனில் போட்டியாளர்களை அவர் கடுமையாக கண்டிக்கவில்லை

ரியோவை அடுத்து அர்ச்சனாவின் வாயை அடைத்த அனிதா!

பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் எல்லாமே கடைசியில் சண்டையில் தான் முடிகிறது. குறிப்பாக லவ்பெட் குரூப்பிற்கும் தனித்திறமையுடன் விளையாடும் ஒருவருக்கும் சண்டை வருவதும்

த்ரிஷாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா என்பது தெரிந்ததே. 20 வருடங்கள் ஒரு நடிகை நாயகியாக நடித்து முன்னணி இடத்தில் இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை.