ஃபைனலுக்கு முன்பு செக்ஸ் ரொம்ப அவசியம்? பொதுவெளியில் பகீர் கருத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கால்பந்து உலகில் பிரேசில் அணி இன்றைக்கும் கொடிக்கட்டி பறந்து வருகிறது. இந்த அணியின் முன்னாள் வீரரான ரொனால்டின்ஹோ பகீர் கருத்து ஒன்றை பொதுவெளியில் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் இப்படித்தான் பிரேசில் அணி கடந்த 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று இருக்குமோ என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டின்ஹோ சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி ஒன்றில் ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் வீரர்களுக்கு செக்ஸ் அவசியம். இதனால் வீரர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.
மேலும் நான் பார்சிலோனா அணிக்காக விளையாடிய காலத்தில் போட்டிக்கு முன்பாக எப்போதும் செக்ஸில் ஈடுபடுவேன். அதனால் எந்தப் பிரச்சனையும் கிடையாது. மாறாக, மறுநாள் நான் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விளையாடுவேன். அந்த உணர்வு என்னை போட்டி அன்று முழுவதும் மனநிறைவுடன் வைத்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்தை அடுத்து பிரேசில் கடந்த 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபிறகு நடந்த சில சம்பவங்களை நெட்டிசன்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு களம் இறங்கிய பிரேசில் அணி ஏற்கனவே 4 உலகக் கோப்பையை வென்ற சாம்பியன் என்ற தகுதியோடு ஜெர்மனியை எதிர்கொண்டது.
ஜெர்மனியும் அந்த இறுதிப் போட்டியில் படு வலிமையாக விளையாடியது. ஆனாலும் ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய பிரேசில் அணியின் முன்னணி வீரர் ரொனால்டின்ஹோ 2 கோலை அடித்ததன் மூலம் அன்றைக்கு பிரேசில் கால்பந்து அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றது.
இந்த வெற்றிக்குப் பிறகு பிரேசில் வீரர்கள் ஒவ்வொருவரும் போட்டிக்கு முந்தைய நாள் இரவு தங்களது மனைவி அல்லது காதலியோடு செக்ஸில் ஈடுபட்டார்கள். இதனால்தான் களத்தில் அதிரடியாக விளையாடினார்கள் என்பது போன்ற கருத்துகளை சுவாரசியமாகக் கூறிவந்தனர். அந்தக் கருத்தை தற்போது மெய்ப்பிக்கும் விதமாக ரொனால்டின்ஹோ தனது பேட்டியில் செக்ஸ் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். இது நெட்டிசன்கள் மத்தியில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com