ரஜினிகாந்த் - கபில்தேவ் சந்திப்பு இதற்குத்தானா? ரசிகர்கள் செம குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சந்தித்தார் என்ற செய்தியையும் இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் மற்றும் நெகிழ்ச்சியான பதிவை கபில்தேவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்திருந்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த சந்திப்பு எதற்காக என்ற பின்னணி குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’லால் சலாம்’. இந்த படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை அம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் கிரிக்கெட் வீரர்களாக நடித்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கபில்தேவ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு சில காட்சிகள் நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் அவர் நடிக்கும் காட்சியின் படப்பிடிப்பின் போது தான், அவர் ரஜினியை சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கபில்தேவ் மட்டும் இன்றி வேறு சில கிரிக்கெட் பிரபலங்களும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மொய்தீன் பாய் என்ற முஸ்லீம் கேரக்டரில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
It is my honour and privilege working with the Legendary, most respected and wonderful human being Kapildevji., who made India proud winning for the first time ever..Cricket World Cup!!!#lalsalaam#therealkapildev pic.twitter.com/OUvUtQXjoQ
— Rajinikanth (@rajinikanth) May 18, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments