ரஜினி குடும்பமே இன்னும் ஓட்டு போடவில்லையா? என்ன காரணம்?

ஒவ்வொரு தேர்தலிலும் காலை 7 மணிக்கு முதல் நபராக வந்து ஓட்டு போடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்னும் ஓட்டு போடவில்லை என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்குகளை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று ஓட்டுப்போட வருவார் என்று எதிர்பார்த்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் சற்று முன் வரை அவர் இன்னும் வாக்கு போடவில்லை என்பது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் கூட ’தலைவர் 169’ படத்தின் போட்டோஷூட் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கண்டிப்பாக வாக்களிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் வாக்குப் போட வராமல் இருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ரஜினி மட்டுமின்றி அவரது மனைவி, மகள்களும் இன்னும் வாக்களிக்க வரவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உடல்நல கோளாறு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இருப்பினும் வாக்குப்பதிவு 7 மணி வரை நடைபெறும் என்பதால் அதற்குள் ரஜினிகாந்த் ஓட்டுபோட வர வாய்ப்பிருப்பதாகவும் ஒருசிலர் கூறிவருகின்றனர்.