கமல் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை: ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிகாந்த இன்று போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் ரஜினி மகளிர் அணி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர், இளைஞர் அணிகளின் சந்திப்பை அடுத்து தற்போது மகளிர் அணி நிர்வாகத்தினர்களை சந்தித்துள்ளேன். ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்களின் அமோக வரவேற்பு இருப்பதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக உள்ளது.
உங்கள் அனைவருக்கும் தெரியும் பெண்கள் இருக்கும் இடத்தில் வெற்றி கண்டிப்பாக இருக்கும். அவர்கள் தரும் உற்சாகம் வெற்றிக்கு வழிவகுக்கின்றது. பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடு முன்னேறியுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ரஜினி மக்கள் மன்றத்திலும் சரி, நான் தொடங்கவிருக்கும் கட்சியிலும் சரி பெண்களுக்கு நிச்சயம் முக்கியத்துவம் இருக்கும்.
மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினிகாந்த், '150 தொகுதிகளில் தனக்கு சாதகமாக இருப்பதாக வெளிவந்த செய்தி உண்மையாக இருந்தால் ரொம்ப சந்தோஷம் என்று கூறிய ரஜினிகாந்த், கர்நாடகாவில் கவர்னர் 15 நாள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கால அவகாசம் கொடுத்தது தவறு என்றும், நல்லவேளையாக சுப்ரீம் கோர்ட் சரியான வழிகாட்டுதலை காட்டியது என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
கமல் கூட்டியது அனைத்து கட்சி கூட்டம் என்றும், நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை என்பதால் அதில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறிய ரஜினிகாந்த், தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout