முடிந்தது ஒரு வருடம்: கட்சி ஆரம்பிக்க ரஜினி தாமதம் செய்வது ஏன்? பழ கருப்பையா

  • IndiaGlitz, [Monday,December 31 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாகவும், ஆன்மீக அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாகவும் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். ஆனால் அவர் அறிவித்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் அவர் தனது அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும் கட்சி ஆரம்பிக்கும் பணிகள் 90% முடிந்துவிட்டதாக ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க தாமதம் செய்வது ஏன் என்று திமுக பிரமுகரும், 'சர்கார்' பட வில்லன் நடிகருமான பழ கருப்பையா கூறுகையில், 'மோடியின் பாஜகவுடன் சேராமல் இருக்கவே ரஜினி கட்சி ஆரம்பிக்க தாமதம் செய்வதாகவும், மோடியுடன் சேர்ந்து அரசியல் செய்தால் அழிந்துவிடுவோம் என்பது மட்டுமின்றி சிறுபான்மையரகளின் ஆதரவையும் இழந்துவிடுவோம் என்று ரஜினி அஞ்சுவதாகவும், அதனால் மோடிக்கு பிடிகொடுக்காமல் இருக்கவே ரஜினி கட்சி ஆரம்பிக்க தாமதம் செய்வதாகவும் கூறியுள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டால் ரஜினி தனது அரசியல் கட்சி அறிவிப்பை விரைவில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.