விஜய் 62 படப்பிடிப்பிற்கு அனுமதி ஏன்? தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,March 21 2018]
கடந்த சிலநாட்களாக புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை, புதிய படங்களின் படப்பிடிப்புகள் ரத்து என ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சினிமா உலகமே ஸ்தபித்து போய் உள்ளது.
இந்த நிலையில் விஜய் நடித்து வரும் 'தளபதி 62', சசிகுமார் நடித்து வரும் 'நாடோடிகள் 2, மற்றும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' ஆகிய படங்களுக்கு மட்டும் ஒருசில நாட்கள் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருசில தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க விளக்கமளித்துள்ளது
இந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: “விஜய் 62வது படத்தில் ஐதராபாத்தில் இருந்து 2 ஸ்டண்ட் மாஸ்டர்கள் வந்துள்ளார்கள். இருவருக்கும் அடுத்தடுத்து பட வேலைகள் இருப்பதால் அவர்களுக்காக படப்பிடிப்பு நடக்கிறது. நாடோடிகள் படப்பிடிப்பு வெளியூரில் எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் அவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வர பாதியில் உடனே நிறுத்த முடியாத காரணத்தால் அவர்களது படப்பிடிப்பு நடக்கிறது” என்று கூறியுள்ளது. இவர்கள் அனைவருமே முறையான அனுமதியை தயாரிப்பாளர் சங்கத்திடம் பெற்றபின்னரே படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.