பிக்பாஸ் வீட்டுக்கு மீண்டும் போக வேண்டாம் என தடுத்தவர் இவர்தான்: ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகியான ஓவியா, இடையில் ஏற்பட்ட மனக்குழப்பத்தால் அந்த வீட்டை விட்டு வெளியேறினார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒருசில சிகிச்சைகள் எடுத்து கொண்டு மீண்டும் வீட்டின் உள்ளே வர பிக்பாஸ் அனுமதி அளித்திருந்தார். ஓவியாவுக்கும் ஒருசில நாட்களில் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல விருப்பம் இருந்தது
ஆனால் ஓவியாவின் தந்தை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்வது குறித்து யோசிக்கலாமே என்று கூறிய அறிவுரை தன்னை தடுத்துவிட்டதாகவும், சின்ன வயதில் இருந்தே நான் எடுக்கும் முடிவுக்கு எந்தவித தடையும் சொல்லாத தனது தந்தை, இந்த விஷயத்தில் மட்டும் தலையிட்டு அறிவுரை கூறியதால் அவருடைய மனம் புண்படக்கூடாது என்பதற்காக நான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதை தவிர்த்துவிட்டேன் என்று ஓவியா கூறியுள்ளார்.
கடைசி ஒருவாரத்தில் ஓவியாவுக்கு ஏற்பட்ட மனக்குழப்பத்தால் தான் அவரது தந்தை மீண்டும் ஒருமுறை அதேமாதிரி நடந்துவிட கூடாது என்ற அக்கறையுடன் அவர் கூறியதாகவும் ஓவியா தெரிவித்தார். மேலும் கடைசி ஒருவார நிகழ்ச்சியை தான் வெளியே வந்தபின்னர் பார்த்தபோது தனக்கே ஆச்சரியமாக இருந்த்தாகவும், 'இது ஓவியா கிடையாதே, ஓவியாவுக்கு இது மாதிரி ஏற்படாதே' என்று ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments