பிரியா வாரியரின் 'ஒரு ஆடார் லவ்' தோல்வி அடைந்தது ஏன்? இயக்குனர் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,March 14 2019]

'ஒரு ஆடார் லவ்' என்ற மலையாள படத்தின் டீசரில் பிரியாவாரியர் கண்ணடித்த ஒரே ஒரு காட்சி, இந்தியா முழுவதும் வைரலாகி ஒரே நாளில் நாடு முழுவதும் புகழ்பெற்றார். இருப்பினும் இந்த படம் கடந்த காதலர் தினத்தில் வெளியானபோது தோல்வி அடைந்தது. பிரியாவாரியரின் கண்ணசவை ரசித்த ரசிகர்கள் இந்த படத்தை ரசிக்கவில்லை

இந்த நிலையில் 'ஒரு ஆடார் லவ்' படத்தின் இயக்குனர் இந்த படம் தோல்வி அடைந்ததன் காரணத்தை தற்போது மனம்விட்டு கூறியுள்ளார். 'இந்த படத்தில் உண்மையில் நூரின் ஷெரின் தான் நாயகி. ஆனால் பிரியாவாரியர் டீசரால் புகழ்பெற்றதால் அவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கதையை மாற்ற தயாரிப்பாளர் வற்புறுத்தினார். எனவே ஒரிஜினல் கதையை பிரியாவாரியாருக்காக மாற்றினேன். இதனால்தான் இந்த படம் தோல்வி அடைந்தது' என்று கூறினார்.

மேலும் இந்த நன்றியை அறியாமல் பிரியாவாரியர் இந்த படத்தின் புரமோஷனுக்கு வரவில்லை என்றும் அவர் ஆதங்கத்துடன் கூறினார்.