'ஜெய்பீம்' படத்திற்கு விருது இல்லையா? கொதித்து எழுந்த திரையுலகினர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
69 வது தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் ’ஜெய்பீம்’ ’சார்பாட்டா பரம்பரை’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய திரைப்படங்களுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்று படங்களுக்குமே எந்த விருதும் கிடைக்காமல் இருந்தது திரை உலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தனக்கு சமூக வலைதளத்தில் ’இந்த தசாப்தத்தின் மிக மோசமான தேர்வு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம். ஜெய்பீம் படத்திற்கு விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது இந்தியாவின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேபோல் ’ஜெய்பீம்’ படத்துக்கு விருது கிடைக்காத ஆதங்கத்தை இயக்குனர் சுசீந்திரன் வெளிப்படுத்தி உள்ளார். ’கடைசி விவசாயி’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. ஆனால் ’ஜெய்பீம்’ படம் மிகவும் முக்கியமான படம், இந்த படத்திற்கு விருது கிடைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் ’ஜெய்பீம்’ படத்திற்கு விருது கிடைக்காதது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக நடிகர் நானி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் அசோக் செல்வன் ’ஜெய்பீம்’ படத்திற்கு ஏன் விருது எதுவும் இல்லை என்ற கேள்வி எழுப்பி இருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout