தினேஷ் கார்த்திக்கை பாராட்டாத முரளிவிஜய்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற நேற்றைய டி20 போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த தினேஷ் கார்த்திக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பாக தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் தினேஷுக்கு வாழ்த்து கூறி போடும் டுவீட்டுகளால் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.

அதேபோல் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் பிரபலங்களும் தினேஷை டுவிட்டரில் வாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இன்னொரு கிரிக்கெட் வீரரான முரளிவிஜய், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்று தனது டுவிட்டில் பதிவு செய்துள்ளார். தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் குறித்து அவர் குறிப்பிடாதது கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

தினேஷ் கார்த்திக்கின் முன்னாள் மனைவி நிகிதாவைத்தான் முரளிவிஜய் திருமணம் செய்துள்ளார் என்பதும், தினேஷை முரளிவிஜய் பாராட்டாததற்கு இதுவே காரணம் என்றும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். உலகமே பாராட்டும் ஒரு வீரரை தனிப்பட்ட வெறுப்பை மனதை வைத்து பாராட்ட மனமில்லாத முரளிவிஜய்க்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.