தமிழகத்தில் மோடி தோல்வி ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்

நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மட்டும் படுதோல்வி அடைந்தது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அரசியல் நிபுணர்கள் கூறும் ஒரே காரணம், தமிழகம் எப்போதுமே பாஜகவுக்கு எதிரான முடிவையே எடுக்கும் என்பதுதான்.

இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக தோல்வி குறித்து கருத்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது என்றும், அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஒட்டு மொத்தமாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் மேலும் கூறினார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலவிதமான கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

சூர்யாவுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் என்ன சம்பந்தம்? என்.ஜி.கே குறித்த சுவாரஸ்ய தகவல்!

சூர்யா நடித்த 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது.

தொலைந்த கணவரை கண்டுபிடிக்கும் நடிகை நந்திதா!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நந்திதா நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் ஏசி கட்! பயணிகள் அதிருப்தி

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிய மெட்ரோ ரயில் சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

விமான பணிப்பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை கழட்டி காட்டிய வாலிபர் கைது!

சவுதியில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் விமான பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்த வாலிபர் ஒருவர் தனது பேண்ட் ஜிப்பை கழட்டி அசிங்கமாக நடந்து கொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் கலக்கும் சூர்யா-கார்த்தி பட நடிகை!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ரகுல் ப்ரித்திசிங் அதன்பின்னர் கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' மற்றும் 'தேவ்' படங்களில் நடித்தார்.