close
Choose your channels

ஷெரினுடன் திடீரென நெருக்கமாகும் கவின்! லாஸ்லியா கோபமா?

Wednesday, September 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்த கவின், முதலில் நான்கு பெண்களுடன் ஜாலியாக பழகினார். அதன்பின் சாக்சியுடன் காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட இந்த காதல் திருமணம் வரை சென்ற நிலையில் திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது. அதன் பின் சாக்ஸி பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே லாஸ்லியாவுடன் கவின் நெருக்கமானார். இதனால் கடுப்பான சாக்ஸி, கவின் மேல் கோபப்பட்டதால், பார்வையாளர்களின் ஆத்திரத்துக்கு ஆளாகி வெளியேற்றப்பட்டார். சாக்சி வெளியேறியவுடன் கவின் - லாஸ்லியா காதல் தங்குதடையின்றி தொடர்ந்தது.

இந்த நிலையில் லாஸ்லியாவின் பெற்றோர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பின்னர் லாஸ்லியாவிடம் மாற்றம் ஏற்பட்டது. கவினுடன் நெருக்கமாவதை லாஸ்லியா தவிர்த்து வந்ததாக தெரிகிறது. முதலில் போட்டியில் கவனம் செலுத்துவோம், எதுவாக இருந்தாலும் வெளியே போய் பார்த்துக் கொள்ளலாம் என்று கவினிடம் லாஸ்லியா கூறுகிறார். லாஸ்லியா தன்னுடைய காதலை சந்தேகப்படுவதாக நினைத்து கொள்ளும் கவின், லாஸ்லியாவை வெறுப்பேத்த அல்லது அவருக்குள் இருக்கும் காதலை வெளியே கொண்டு வர ஒரு யுக்தியை கவின் பயன்படுத்துவதாக தெரிகிறது.

அதாவது கடந்த இரண்டு நாட்களாக ஷெரினுடன் கவின் நெருக்கமாகி வருவதாக தெரிகிறது. ஷெரினிடம் கவின் சில சேட்டைகள் செய்து கொண்டிருப்பதை லாஸ்லியாவும் ஓரக்கண்ணால் ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் அவர் புன்சிரிப்புடன் இதனை எதிர்கொள்வதாகவும், அவர் கடுப்பானது போல் தெரியவில்லை என்றும் புரிய வருகிறது.

இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவெனில் கவினின் செல்ல சேட்டைகளை ஷெரின் ரசிப்பதுதான். நான் உன்னை காதலிக்கவில்லை உன்னை வெறுக்கவும் இல்லை, என்னை தொந்தரவு செய்யாதே என்று ஷெரின், கவினிடம் கூறினாலும் அது அவரது உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகளாஅக தெரியவில்லை. கவின் செய்யும் சேட்டைகளை உள்ளுக்குள் அவர் ரசித்து கொண்டு இருப்பதாகவே தெரிகிறது.

பிக்பாஸ் போட்டி இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் எவிக்சனில் இருந்து தப்பிக்கவும், மக்களின் கவனத்தை தன் மீது திருப்பவும் ஷெரின் கவினின் சேட்டைகளை ரசிப்பது போல் நாடகமாடுகிறாரா? அல்லது லாஸ்லியாவின் எண்ணத்தை புரிந்து கொள்ள கவின் செய்யும் தந்திரமா? அல்லது உண்மையிலேயே கவின் பழைய ஜாலி மூடுக்கு வந்துவிட்டாரா? என்பது புரியாத புதிராக உள்ளது. இருப்பினும் கவினின் இந்த திடீர் மாற்றத்தால் பார்வையாளர்கள் பலர் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment