கதிர் ஆனந்துக்கு மீண்டும் சீட் ஏன்? தளபதியார் சொன்ன காரணமும் வேலூர் மக்களின் விசுவாசமும்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் என எதிர்க்கட்சிகள், உள்கட்சியை சேர்ந்த சிலர் பேசிக் கொண்டிருந்தாலும் தளபதியார் கதிர் ஆனந்திற்கு மீண்டும் சீட் கொடுக்க காரணம் பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது அவர் வைத்த நம்பிக்கையும் அவருடைய விசுவாசம் தான்..
கலைஞர் கருணாநிதி நான்காம் முறையாக முதலமைச்சராக இருந்தபோது அதிமுகவின் எம்எல்ஏ செங்கோட்டையன் சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை தொடர்பான கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டபோது கலைஞர், அமைச்சர் துரைமுருகனை நோக்கி ’பேசு’ என கண்ஜாடை காட்டினார். அதன் பின்னர் எழுந்த துரைமுருகன் பொதுப்பணி துறையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் முதல் பழுது நீக்கம் வரை எந்தவித குறிப்பும் இல்லாமல் பட்டியலிட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு தான் ’கழக கவுரவத்தை காத்தாய் தம்பி’ என்று துரைமுருகனை பெருமையாக கலைஞர் கூறினார்
இதை ஞாபகப்படுத்திய தளபதியார் துரைமுருகன் அவர்கள் மகனுக்கு சீட் கொடுப்பது என்பது வாரிசு அரசியல் அல்ல, அவர் இந்த இயக்கத்தின் ரத்தமும் சதையுமாக நாடி நரம்பாக ஊறிப்போனவர், அவரது மகனுக்கு சீட் தருவது அவர் தந்த உழைப்பிற்கான ஊக்கத்தொகை என்று கழக உறுப்பினர்களிடம் தளபதியார் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போது வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தலில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தனியாக வேலூரில் தேர்தல் நடந்த போது மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடிப்படையில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் களத்தில் இறங்கினார். வேலூர் மக்கள் அவருடைய விசுவாசத்திற்கு தந்த பரிசு தான் கடந்த முறை பெற்ற வெற்றி. அதே பரிசை இந்த முறையும் அவருக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை ஒவ்வொரு திமுக தொண்டர்களுக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments