close
Choose your channels

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் நடிக்காதது ஏன்? பிரபல நடிகர் தகவல்!

Sunday, August 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் வரை திரையரங்குகளில் வசூல் செய்தது மட்டுமின்றி ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து உள்ள நிலையில் பிரபல நடிகர் கார்த்தியும் நடிப்பதாக இருந்தது என்றும் ஆனால் ஒரு சில காரணங்களால் நடிக்கவில்லை என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளது

சமீபத்தில் அளித்த பேட்டியில் கார்த்தி இதுகுறித்து கூறியபோது, ‘கைதி’ படத்தின் டெல்லி ரோலில் சில காட்சிகள் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் கேட்டதாகவும் ஆனால் அப்போது ’பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் நீண்ட தலைமுடியுடன் இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் அதனால் தான் குரல் மட்டும் கொடுத்ததாகவும் அவர் கூறினார்

‘விக்ரம்’ படத்தில் சூர்யா, ரோலக்ஸ் கேரக்டரில் ஐந்து நிமிடங்கள் நடித்திருந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது போல் கார்த்தியும் நடித்து இருந்தால் மிகப் பெரிய வரவேற்பு பெற்று இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்

இந்த நிலையில் ‘கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டில் தொடங்க இருப்பதாகவும் லோகேஷ் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் கார்த்தி உறுதி செய்துள்ளார். மேலும் ‘கைதி 2’ படத்திலும் ரோலக்ஸ் கேரக்டர் உண்டு என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment