'பாபநாசம்' படத்தில் நடிக்க கமல் தயங்குகிறாரா? 

  • IndiaGlitz, [Saturday,June 19 2021]

மோகன்லால், மீனா நடித்த நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ’த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ’பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடித்த இருந்தனர் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ’த்ரிஷ்யம் 2’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ் ரீமேக் விரைவில் தொடங்கப்படும் என்றும் அதில் கமலஹாசனே நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ’த்ரிஷ்யம் 2’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகை ஸ்ரீபிரியா பெற்றுள்ள நிலையில் அவரே இந்த படத்தை இயக்குவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’பாபநாசம் 2’ படத்தில் நடிக்க கமல்ஹாசன் நடிக்க தயங்கி வருவதாக கூறப்படுகிறது. ’த்ரிஷ்யம் 2’ படம் திரைப்படம் ஓடிடியில் வெளியானதால் பெரும்பாலான தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து இருப்பார்கள் என்றும் இதனால் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தால் பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று கமல் கருதுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ’த்ரிஷ்யம்’ படத்தின் கிளைமாக்ஸில் இருந்து ’பாபநாசம்’ படத்தின் கிளைமாக்ஸ் கொஞ்சம் வித்தியாசம் உண்டு என்பதும் ’பாபநாசம்’ படத்தில் கிட்டத்தட்ட கமல் தனது குற்றத்தை ஒப்புக் கொள்வது போன்று வசனம் பேசி இருப்பார் என்றும் அதனால் தமிழில் இந்த படம் இரண்டாம் பாகம் எடுத்தால் சரிவராது என்று கமலஹாசன் எண்ணுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கமலஹாசன் மனதை ஸ்ரீப்ரியா மாற்றுவாரா? ’பாபநாசம் 2’ உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஆற்றுத் தண்ணீரில் கொரோனா வைரஸ்… இந்தியாவை அச்சுறுத்தும் புது சிக்கல்!

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆற்று நீரில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான தடயங்களை

தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஆண்மை குறையுமா? தொடரும் சந்தேகத்திற்கு பதில்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஆண்மை குறைபாடோ அல்லது விந்தணுக்களின் எண்ணிக்கையில் மாற்றமோ ஏற்படாது என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பப்ஜி பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… கூகுள் ப்ளே ஸ்டோரில் புது வரவு!

பப்ஜி கேமை உருவாக்கிய தென் கொரியாவைச் சேர்ந்த கிராப்டன் நிறுவனம் தற்போது இந்தியர்களுக்கு என பிரத்யேகமாக “பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா” எனும் கேமை அறிமுகப்படுத்தி உள்ளது.

கின்னஸ் முயற்சியில் பைக் சாகச வீரர் உயிரிழப்பு… வீடியோ வெளியிட்டு கதறும் நெட்டிசன்ஸ்!

பைக் ரேஸில் கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் தனது சாதனையைத் தானே முறியடிக்க நினைத்து இருக்கிறார்.

சாம்பலாகும் மதன் சாம்ராஜ்யம்....! கோபப்பட்ட குமாருக்கு போலீஸ் நச் பதில்....!

கைது செய்த பப்ஜி மதனை காவல்துறையினர் சென்னை அழைத்து வந்துள்ளனர்.