30 நாளில் ஏன் இந்த முடிவு: 'கைதி' தயாரிப்பாளர் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,November 26 2019]

தளபதி விஜய் நடித்த மாஸ் திரைப்படமான ‘பிகில்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியான நிலையில் இந்த திரைப்படத்துடன் எந்த படமும் வெளிவர தயங்கியது.

இந்த நிலையில் தைரியமாக ‘பிகில்’ திரைப்படத்துடன் வெளிவந்த ஒரே திரைப்படம் கார்த்தியின் ‘கைதி’திரைப்படம் என்பது தெரிந்ததே. இந்தத் திரைப்படம் முதல் நான்கு நாட்களில் சுமாரான வசூலை தந்து கொண்டிருந்தாலும் ஐந்தாவது நாளில் இருந்து பிக்கப் ஆகி நல்ல வசூலை கொடுத்தது. மேலும் திரையரங்குகளும் காட்சிகளும் ஐந்தாவது நாளுக்கு பின் அதிகமானதால் தயாரிப்பாளருக்கு மட்டுமன்றி திரையரங்கு உரிமையாளர்கள் வினியோகஸ்தர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நல்ல லாபத்தை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’கைதி’ திரைப்படம் தற்போது வெளிவந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையிலும் இந்த படம் சென்னை உள்பட ஒரு சில பெருநகரங்களில் இன்னும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திடீரென்று இன்று முதல் தனியார் செயலி ஒன்றில் இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர் அனுமதி கொடுத்துள்ளார். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது

30 நாட்களில் ‘கைதி’ திரைப்படம் செயலியில் திரையிடப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது சமூக வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

BO இல் வெற்றிகரமாக இயங்கும் போது OTT இல் உள்ள படத்தை திரையரங்கில் எடுத்துவிட்டு ஹாட் ஸ்டார் போன்ற ஆன்லைன் சேனல்களில் வெளியிடுவது, தொடர்ந்தால் சினிமா பார்வையாளர்கள் குறைந்துவிடுவார்கள் என்று கேட்கிறீர்கள் !? ஆம்! ஆனால், 3 வது வாரத்திலிருந்து பைரசி மற்றும் குறைவான வசூல் ஆகிய பிரெச்சனைகளும் உள்ளன ஆகையால் தயாரிப்பாளர்கள் இதன் மூலம் மட்டுமே அவற்றை ஈடுசெய்ய முடியும்! என்று பதிவு செய்துள்ளார்.

More News

ஆதித்யவர்மா துருவ் விக்ரமுக்கு மீண்டும் சிக்கல்!

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த 'ஆதித்ய வர்மா' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் குறிப்பாக இளைஞர்களிடமும்

அஜித் பெயரில் புதிய அரசியல் கட்சி: மதுரையில் பரபரப்பு

அரசியல் ஆசை இல்லாத ஒரே மாஸ் நடிகர் அஜித்தான் என்பது அனைவரும் தெரிந்ததே. நடிப்பு மற்றும் தனது பொழுதுபோக்குகள் தவிர வேறு எந்த விஷயத்திலும்

பாலியல் பிரச்சனைகளுக்கு பெண்களும் காரணம்: கே.பாக்யராஜ் பேச்சு

பாலியல் குற்றங்களுக்கு பெண்களே காரணம் என்றும் பெண்கள் இடம் கொடுக்காமல், சுய கட்டுப்பாடுடன் இருந்தால் பாலியல் பிரச்சினைகள் இருக்காது என்றும் பிரபல இயக்குநர் கே பாக்யராஜ்

சபரிமலை செல்ல முயன்ற இளம்பெண் மீது பெப்பர் ஸ்பிரே: பெரும் பரபரப்பு

ஒருசில தவறான நோக்கம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள பெப்பர் ஸ்பிரே மற்றும் மிளகாய் பொடி ஸ்பிரே அடிக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது

'சூரரை போற்று' படத்திற்காக மீண்டும் ஒரு பாடலை பாடிய சூர்யா!

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள்