திருமணத்திற்கு முன்பு துணையின் Blood Groupஐ கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்…. ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணத்திற்காக நாம் ஜாதகத்தை மட்டும் பார்க்கிறோம். ஆனால் திருமணத்திற்கு முன்பு உங்கள் துணையின் ரத்த வகையை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். காரணம் RH ரத்தவகை கொண்ட பெண்கள் எதிர் தரப்பான ABO ரத்த வகையினரைத் திருமணம் செய்து கொள்ளும்போது குழந்தை விஷயத்தில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.
இதனால் சில சமயங்களில் மூளை குறைபாடு கொண்ட குழந்தைகள், குறுகிய காலத்தில் கரு களைந்து போதல், ஏன் உயிரிழப்பு கூட நிகழ்கிறது. இதனால் ரத்த வகையை அவசியம் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு துணையை தேடிக் கொள்வது நலம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மருத்துவர்கள் இரத்த வகையை ABO ரத்தவகை, RH ரத்தவகை என இரண்டு முறைகளில் பிரிக்கின்றனர். அனைத்து ரத்த வகைகளையும் நாம் ABO என்ற எழுத்துக்களுக்குள் அடக்கிவிட முடியும். ஆனால் ABO வகை ரத்ததில் இல்லாத சிவப்பு அணுக்கள் அல்லது ஒரு புரதத்தை நெகட்டிவ் ரத்த வகைகள் கொண்டு இருக்கின்றன. இதைத் தனித்து காட்டுவதற்காக RH ரத்தவகை என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
திருமணத்திற்கு ரத்தப் பொருத்தம்- திருமணம் செய்ய வேண்டும் என்றால் ரத்தப் பொருத்தம் அவசியம் வேண்டும் என விஞ்ஞானம் கூறுகிறது. காரணம் ஒரு குழந்தை பிறக்கும்போது பெரும்பாலும் ஆணின் இரத்த வகையோடு பிறப்பதாக மருத்துவ உலகம் சுட்டிக் காட்டுகிறது. குறைந்த அளவில் இதில் மாற்றமும் இருக்கலாம்.
இந்நிலையில் RH அதாவது நெகட்டிவ் ரத்த வகையைக் கொண்டுள்ள ஒரு பெண், பாசிட்வ் ரத்த வகையைக் கொண்ட ஒருஆணை திருமணம் செய்து கொள்ளும்போது சிக்கல் ஏற்படுகிறது. அதாவது O- ரத்தம் கொண்ட ஒரு பெண் O+ கொண்ட ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டால் அந்தப் பெண்ணுக்கு பெரும்பாலும் O+ ரத்த வகையில் கரு உண்டாகும். இப்படி O+ ரத்த வகையில் உண்டாகும் குழந்தையின் ரத்தமானது தாயின் உடலில் கலக்கும்போது, அதற்கு எதிராக தாயின் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆன்டிபாடிகளைச் சுரந்து உடனடியாக கருவை அழித்துவிடும் அபாயம் இருக்கிறது.
சில நேரங்களில் O-, O+ என இரண்டு ரத்தங்களும் கலப்பதால் மூளை குறைபாடு கொண்ட குழந்தை பிறந்து விடுதல், அல்லது கரு களைந்து போதல், ஏன் தாய் மற்றும் சேய் இருவருக்குமே உயிரிழப்பு ஏற்படலாம் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. எனவே திருமணத்தைப் பொறுத்த வரைக்கும் யார் உங்களுக்கு ரத்தத்தைத் தானமாக கொடுக்க முடியுமோ(Donar), அந்த ரத்த வகை உள்ளவர்களை துணையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ரத்தக் கொடையாளர்கள்- A+, A-, B+, B-, AB+, AB-, O+, O- என ரத்த வகைகளை நாம் பிரிக்கிறோம். இதில் நெகட்டிவ் ரத்த வகையினர் மற்றவர்களுக்கு ரத்தத்தைக் கொடுக்க முடியுமே தவிர, எல்லோரிடமும் இருந்தும் தானமாக பெற்றுக்கொள்ள முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் A+ காரர்கள் A+, A-, O+, O- ரத்த வகையைக் கொண்டவர்களிடம் இருந்து ரத்தத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
B+ காரர்கள் B+, B-, O+, O- ரத்த வகையைக் கொண்டவர்களிடம் இருந்து ரத்தத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
AB+ காரர்கள் மிகவும் அதிர்ஷ்சாலிகள் என்றே சொல்ல வேண்டும். இந்த ரத்தவகையைக் கொண்டவர்கள் எல்லா ரத்தவகையினரிடமும் ரத்தத்தைத் தானமாக பெறமுடியும்.
O+ ரத்தப் பிரிவினரை நாம் கொடையாளர்களாகக் கருதுகிறோம். ஆனால் இவர்களுக்கு O+, O- நபர்களிடம் இருந்து மட்டுமே ரத்தத்தைத் தானமாகப் பெறமுடியும்.
A-காரர்கள் O-, A- நபர்களிடம் இருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
B-காரர்கள் B-, O- நபர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
AB- ரத்தவகையைக் கொண்டவர்களும் அதிர்ஷ்டசாலிகளாகவே கருதப்படுகின்றனர். காரணம் இவர்கள் O-, A-, B-, AB- என 4 வகையான ரத்தப் பிரிவினரிடம் இருந்து ரத்தத்தைத் தானமாகப் பெறமுடியும்.
இறுதியாக O- கொண்ட நபர்கள் O- நபர்களிடம் மட்டுமே ரத்தத்தைக் கொடையாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இவர்கள் யுனிவர்சல் டோனர்களாக A+, A-, B+. B-, AB+, AB-, O+, O- என அனைத்து மக்களுக்கும் ரத்தத்தை தானமாக அளித்து வருகின்றனர். அந்த வகையில் மிகவும் அரிய ரத்த வகையாகவும் O- கருதப்படுகிறது.
இதனால் ரத்தத்தைத் தானமாகக் கொடுக்க இயலும் நபர்களை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கலாம் என மருத்துவ உலகம் சுட்டிக் காட்டுகிறது. இன்னும் எளிதாக திருமணத்தை பொருத்த வரைக்கும் பாசிட்வ் கொண்ட ஒரு ஆண் பாசிட்வ் கொண்ட ஒரு பெண்ணையும் நெகடிவ் கொண்ட ஒரு பெண் நெகடிவ் கொண்ட ஒரு ஆணையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே பரிந்துரைத்து வருகின்றனர்.
காரணம் நெகடிவ் கொண்ட ஒரு பெண், பாசிட்வ் ஆணை தேர்ந்தெடுக்கும்போது குழந்தைப் பிறப்பில் சிக்கலை எதிர்க்கொள்ள வேண்டிய இருக்கிறது. இதனால் RH கொண்ட ஒரு பெண் RH கொண்ட ஒரு ஆணையே துணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments