2 வருடம் இரவு உணவு இல்லாமல் கஷ்டப்பட்டார்… இஷானை குறித்து மனம் திறந்த தந்தை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது பல முன்னணி வீரர்களின் பாராட்டை வாங்கிக் குவித்து கொண்டு இருப்பவர் இஷான் கிஷன். இந்நிலையில் தன் முதல் போட்டியிலேயே இஷான் 32 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 ரன்களை எடுத்து இருந்தார். அதோடு ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இதனால் வரும் போட்டிகளில் இஷான் மீதான எதிப்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் இஷான் தன்னுடைய 12 ஆம் வயதில் விளையாட்டு பயிற்சிக்காக ராஞ்சியில் தங்கி இருந்தார் என்றும் அப்போது கிட்டத்தட்ட 2 வருடங்கள் இரவு நேரம் உணவே இல்லாமல் கஷ்டப்பட்டார் என்றும் மனம் திறந்துள்ளார் அவரது தந்தை.
மேலும் ராஞ்சியில் அவர் தங்கி இருந்தபோது 4 சீனியர்களுடன் தங்கி இருந்தார் என்றும் அவர்களின் பாத்திரங்களை சுத்தம் செய்வது, தண்ணீர் பிடிப்பது போன்ற கஷ்டங்களையும் அனுபவித்தார் என்றும் இஷானின் தந்தை தெரிவித்து உள்ளார். இதை உணர்ந்த நாங்கள் பின்னர் தனியாக வீடு எடுத்துக் கொடுத்தோம் எனவும் கூறியுள்ளார்.
இஷான் கிஷன் முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். தற்போது முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com