மத்தியஅரசு அறிமுகப்படுத்திய “ஆரோக்கிய செயலி”  ஆப் ஏன் விமர்சிக்கப்படுகிறது???

  • IndiaGlitz, [Wednesday,April 15 2020]

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசால் கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி “ஆரோக்கிய சேது” (Arogya –Sethu - App). இந்த செயலியை ஆண்ட்ராய்ட் செல்போன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் பட்சத்தில் நமது அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் இருந்தால் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். மேலும் அவரைப் பற்றிய தகவலை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த செயலியை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் அண்மையில் அறிமுகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஃப்ளுடூத் மற்றும் லொகேஷன் ஷேர் மூலம் இந்த செயலி இயக்கப்படுகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்கமொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. மேலும் செயலியில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்திசெய்து நாம் நடமாடும் இடத்தில் கொரோனா வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் முடியும்.

தற்போது இண்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் எனும் இணையதளம் சேவை Arogya –Sethu  செயலி அந்தரங்க உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது எனக் குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த செயலி கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வடிவமைக்கப் பட்டிருந்தாலும் மற்ற நாடுகளில் மனித உரிமைகளுக்கு எதிராக தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படாது எனும் உத்தரவாதத்துடன் செயல்படுகிறது. ஆனால் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டு விதிகள், அந்தரங்க கொள்கைகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் சட்ட வரையறைகள் எதுவும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளும்போது உங்களது செல்போன் எண், வயது, பாலினம், இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். கொரோனா வைரஸ் தடுப்புக்காகச் சேகரிக்கப்படும் இந்தத் தகவல்கள் வேறு காரணங்களுக்கு பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது என்பதே தற்போது வைக்கப்படும் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கூறும்போது “ஆரோக்கிய சேது செயலியை மாநிலங்களுக்கு இடையிலான பயணத்துக்கு இ-பாஸ் ஆகவும் பயன்படுத்தலாம் எனக்கூறியிருந்தார். பல ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், கொரோனா வைரஸ் தடுப்புக்காகப் பயன்படுத்தப்படும் இந்த செயலியை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தப்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை செய்கிறது. இந்த மாதிரியான எந்த உத்திரவாதமும் இல்லாமல், வரைமுறைகள் எதுவும் இல்லாமல் இந்தியாவில் செயலி உருவாக்கப்பட்டிருப்பதால் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இந்தச் செயலியை பயன்படுத்துவோரின் அந்தரங்க உரிமையை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இண்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை வைத்துவருகின்றன. 

More News

மே 3 வரை எல்லாம் பத்தாது, 2022 வரை சமூக விலகல் வேண்டும்: ஹார்வர்டு பல்கலை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்,

கொரோனாவிடம் இருந்து தப்பித்த சென்னையின் 2 மண்டலங்கள்: எப்படி சாத்தியமாயிற்று

ந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, டெல்லியை அடுத்து தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கேரளாவிடம் இருந்து பாடம் கற்று கொள்ளுங்கள்: எஸ்.ஆர் பிரபு அறிவுரை

இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டது. அதன்பின் கேரளாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக முதலிடத்தில் இருந்தது 

ரஜினி, விஜய், தனுஷ் பட நாயகியின் கணவருக்கு கொரோனா? அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' விஜய் நடித்த 'அழகிய தமிழ்மகன்' தனுஷ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்' விக்ரம் நடித்த 'கந்தசாமி' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா

மே 3 வரையிலான ஊரடங்கின் வழிகாட்டுதல் நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என நேற்று பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது தெரிவித்தார்.