நாடு முழுவதும் ப்ளூ ஜீன்ஸ்க்கு தடையா??? இப்படியொரு விசித்திரம் எங்கு தெரியுமா???

  • IndiaGlitz, [Wednesday,December 30 2020]

 

உலகின் மர்மப்பிரதேசமாகத் திகழும் வடகொரியாவில் ப்ளூ ஜீன்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தடையை மீறி யாராவது அந்த உடையை அணிந்தால் சிறை தண்டனைதான் கிடைக்கும். அதோடு இப்படி சர்வசாதாரணமான காரணங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள் மீண்டு வருவது மிகக் கடினம் என்றும் கூறப்படுகிறது.

உலகின் பெரும்பாலான ஆண்களால் விரும்பப்படுவது ஜீன்ஸ் உடை. அதிலும் ப்ளூ ஜீன்ஸ் என்றால் எல்லோருக்கும் அலாதி பிரியம். இப்படியொரு உடையை அதிபர் கிம் ஜாங் உன் ஏன் தடை செய்தார்? இங்குதான் டிவிஸ்டே இருக்கிறது. வடகொரியா தன்னுடைய மிகப்பெரிய எதிரியாகக் கருதுவது அமெரிக்காவை. அமெரிக்காவில்தான் ஜீன்ஸ் உடைகள் அறிமுகமானது. மேலும் பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்த உடையை மிகவும் விரும்பி அணிகின்றனர். இதனால் அமெரிக்காவின் ஒட்டுமொத்த அடையாளமாகவே இந்த ஜீன்ஸை நினைத்து விட்டார் கிம்.

அதனால் மெரிக்காவின் ஏகாதிபத்தியமாக திகழும் ஜீன்ஸ் உடையை வடகொரியர்கள் யாரும் அணியக்கூடாது. தடையை மீறி அணிந்தவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும் அந்நாடு முழுவதும் இணைய வசதியும் துண்டிக்கப்பட்டு இருக்கிறதாம். ஏற்கனவே வடகொரிய அரசு தொலைக்காட்சிகளைத் தவிர வேறு சேனல்களுக்கு அங்கு அனுமதி கிடையாது. இப்போது இணையமும் இல்லை. இதனால் வடகொரிய மக்கள் வெளியுலகில் என்ன நடக்கிறது என்றுகூட தெரியாமல் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இப்படி தினம் ஒரு கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் வடகொரியா அதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களையும் விட்டு வைப்பதில்லை. உடனே சிறை தண்டனை. சித்ரவதை. சிறைக்கு சென்ற பாதிப்பேர் மீண்டு வருவதும் இல்லை. இதனால் சர்வாதிகாரத்தின் உச்சமாகச் சிலர் வடகொரியாவை கை காட்டுகின்றனர்.

More News

யார் என்ன சொன்னாலும் கேட்க வேண்டாம். எனக்கு நீதான் முக்கியம்: ரஜினி குறித்து பாரதிராஜா

"இன்று பூகம்பமான ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. ரஜினி அரசியலுக்கு இப்போது வருவார், அப்போது வருவார், எப்போது வேண்டுமானாலும் வருவார் என்றெல்லாம் வதந்திகள் வெளியானபோது, கட்சியை அறிவிக்க இருந்தார்.

நான் போகிறேன், வரமாட்டேன்: அரசியலில் இருந்து விலகிய ரஜினியின் ஆலோசகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தனது முடிவை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துவிட்ட நிலையில் அவருடைய அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன்

சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த 'இந்தியன் 2' நாயகி!

சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் 'பத்து தல' என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றும், இந்தப் படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார்

வெளியே வரும் நிலைமையா? அதிர்ச்சியில் ரம்யா பாண்டியன்

இந்த வாரம் சிங்கிள் எவிக்சனோ அல்லது டபுள் எவிக்சனோ, நீ வெளியே வந்தால் அதற்கு காரணம் நீ கிடையாது என்று ரம்யாவின் சகோதரர் கூறியபோது 'வெளியே வரும் நிலைமை இருக்கின்றதா?

-45 டிகிரி செல்சிஸில் வாழும் மனிதர்கள்? சாட்சிக்கு வெளியாகி இருக்கும் வைரல் புகைப்படம்!!!

ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலப் பருவத்தின்போது ரஷ்யாவின் சைபீரியா தலைப்பு செய்திகளில் வந்து விடுகிறது.