99 சாங்ஸ் விழாவில் இந்தியில் பேசியது ஏன்? தொகுப்பாளினி விளக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,March 31 2021]

சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் தயாரித்து, இசை அமைத்து, கதை எழுதிய ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த பாடல் வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி திடீரென ஒரு சில வரிகள் ஹிந்தியில் பேச, உடனே ரஹ்மான் சிரித்து கொண்டே ‘ஹிந்தி’ என்று தொகுப்பாளினியை கலாய்க்கும் வீடியோ இணையதளங்களில் வைரலானது

மேலும் ‘உங்களிடம் நான் முதலிலேயே கேட்டேன் தமிழ் தெரியுமா என்று ரஹ்மான் கூறியதும், அதற்கு தொகுப்பாளினி ’நான் தமிழ் தான் சார் பேசினேன், ஒரு சில வார்த்தைகள் மட்டும் தான் வெல்கம் செய்வதற்காக இந்தியில் பேசினேன்’ என்று கூற அதன்பிறகு ரஹ்மான், ‘சரி பரவாயில்லை’ என்று கூறினார். இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்த அந்த தொகுப்பாளினி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தபோது இஹான் தமிழ் தெரியாததால் சற்று அசௌகரியமாக இருந்தார். எனவே அவரை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் ஒரு சில வார்த்தைகள் ஹிந்தியில் பேசினேன் என்று கூறினார்.

மேலும் நான் இஹானுக்கு தமிழ் வார்த்தைகள் எல்லாம் கற்று கொடுக்கலாம் என்றெல்லாம் திட்டமிட்டிருந்தேன். ஆனால் ரஹ்மான் சார் இவ்வாறு சொன்னதும் எனக்கு எதுவும் ஓடவில்லை. நான் அப்படியே சில நிமிடம் ஃப்ரீஸ் ஆகிவிட்டேன் என்றும் கூறினார்.

More News

தூள் கிளப்பும் ஸ்ரேயா சரணின் ஹோலி டான்ஸ்: வைரல் வீடியோ

சமீபத்தில் வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் ஹோலி பண்டிகையை கொண்டாடியது

'சுந்தரி' சீரியல் நடிகையின் கணவர் இந்த இளைஞரா? வைரல் புகைப்படம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் பிரபலமடைந்து அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கத் தொடங்கியவர் கேப்ரில்லா.

'தளபதி 65' படத்தில் கவின் நடிக்கின்றாரா? 

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படமான 'தளபதி 65' திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் விஜய், நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

நயன்தாரா என்ன திமுக கொள்கை பரப்பு செயலாளரா? ராதாரவி கேள்வி

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த வகையில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு

திமுகவின் பி-டீமா டிடிவி தினகரன்… தொடரும் சர்ச்சை விளம்பரங்கள்!

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பின்பற்றி அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர் டிடிவி தினகரன்.