முதல்வர் பழனிச்சாமியை திடீரென சந்தித்தது ஏன்? கருணாஸ் எம்.எல்.ஏ விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நகைச்சுவை நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக தினகரன் அணிக்கு ஆதரவு கொடுத்து வந்த கருணாஸ் எம்.எல்.ஏ, சமீபத்தில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் முதல்வரை விமர்சனம் செய்ததால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்து முதல்வருக்கு எதிராகவும், அதிமுக ஆட்சிக்கு எதிராகவும் விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் இன்று திடீரென அவர் முதல்வரை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ, 'தனிப்பட்ட காரணங்களுக்காக நான் முதல்வரை சந்திக்கவில்லை. திருவாடானை தொகுதியில் கன்மாயை தூர்வாருவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசுவதற்காக முதல்வரை சந்தித்தேன்' என்று கூறினார்.
மேலும் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரிய கடிதத்தை திரும்பப்பெற்றதாகவும், ச.பாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கும் என்பதால் வாபஸ் வாங்கியதாகவும் கருணாஸ் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com