சரத்குமாரிடம் 'யார் நீங்க' என்று ஏன் கேட்கவில்லை: சந்தோஷ்

  • IndiaGlitz, [Friday,June 01 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்றிருந்தபோது சந்தோஷ் என்ற வாலிபர் அவரை பார்த்து 'யார் நீங்க' என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து வீடியோ வைரலாகிய நிலையில் தான் கேள்வி கேட்டதன் நோக்கம் என்ன? என்பது குறித்தும் சந்தோஷ் ஒரு வீடியோவில் விளக்கினார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தூத்துகுடிக்கு சென்ற மறுநாள் நடிகர் சரத்குமார் தூத்துகுடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். ரஜினியிடம் 'யார் நீங்க' என்று கேள்வி கேட்ட சந்தோஷையும் சரத்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார்

இந்த நிலையில் ரஜினியிடம் கேட்ட 'யார் நீங்க' என்ற கேள்வியை தான் சரத்குமாரிடம் ஏன் கேட்கவில்லை என்பதற்கு சந்தோஷ் விளக்கமளித்துள்ளார். எங்களுடைய 100 நாள் போராட்டத்தில் சரத்குமார் ஒரு நாள் பங்கெடுத்துக்கொண்டது மட்டுமின்றி நாங்கள் குடித்து கொண்டிருக்கும் மிகவும் மோசமான அந்த தண்ணீரையே அவரும் குடித்தார்.

எனவேதான் அவரை நீங்கள் யார் என்று கேட்கவில்லை’’ என்று தெரிவித்தார்.